தமிழ்நாடு

tamil nadu

'திமுக ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு!' - இது தங்கமணியின் எச்சரிக்கை மணி!

By

Published : Mar 15, 2021, 10:50 PM IST

நாமக்கல்: குமாரபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தனது வேட்புமனுவை இன்று தாக்கல்செய்ததைத் தொடர்ந்து, 'திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் மீண்டும் மின்வெட்டு வந்துவிடும்' எனத் தெரிவித்தார்.

அமைச்சர் தங்கமணி
அமைச்சர் தங்கமணி

நாமக்கல் குமாரபாளையத்தில் அதிமுக சார்பில் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி போட்டியிட வேட்புமனு தாக்கல்செய்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் நாமக்கல் மாவட்டத்திற்கு நிறைய திட்டங்களைக் கொடுத்திருக்கின்றார். குமாரபாளையம் தொகுதிகளுக்கும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டுவந்திருக்கின்றோம். தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக குமாரபாளையம் நகராட்சியில் புதைவடத் தளமாக மாற்றுவதற்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 200 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடுசெய்தார்.

அதில் தற்போது 50 விழுக்காடு பணியும் முடிந்துவிட்டது. அதேபோல கலைக்கல்லூரி, தாலுகா அலுவலகம், போக்குவரத்து காவல் நிலையம், காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம், தரமான சாலைகள் என நிறைய திட்டங்களை முதலமைச்சர்கள் கொடுத்திருக்கின்றார்கள்.
இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, சாமானியருக்கும், குடும்பத்திற்கும் நடக்கும் தேர்தல். திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தமிழ்நாட்டில் மின்வெட்டு வந்துவிடும், அதேபோல கட்டப்பஞ்சாயத்து வந்துவிடும், நில அபகரிப்பு வந்துவிடும் என மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அதனால் முதலமைச்சர் எடப்பாடி மீண்டும் பேராதரவோடு தமிழ்நாட்டின் முதலமைச்சராக வருது உறுதி.
அதேபோல விசைத்தறி தொழிலாளர்களுக்கு 750 யூனிட் என்பது 1000 யூனிட் என உயர்த்தப்படும் அறிவித்துள்ளார். அனைத்து மக்களுக்கும் நல்ல திட்டங்களை அறிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்திற்கு ஏப்ரல் 2ஆம் தேதியன்று பரப்புரை செய்ய முதலமைச்சர் வருகிறார்.
எந்த இடம் என்பது இன்னும் முடிவாகவில்லை. தமிழ்நாட்டில் அதிமுக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேர்தல் 2021: கவர்ச்சி அறிவிப்புகள் - பெண்களுக்கு வரமா, பாரமா?

ABOUT THE AUTHOR

...view details