தமிழ்நாடு

tamil nadu

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @7pm

By

Published : May 12, 2021, 7:01 PM IST

ஈடிவி பாரத்தின் மாலை 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @7pm
7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @7pm

ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் கூட்டம்

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை கட்சி தலைவர்களின் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

'குக்கூ.. குக்கூ.. நர்ஸூ பண்ணும் சேவைக்கு..' - வைரல் வீடியோ!

சர்வதேச செவிலியர் தினமான இன்று செவிலியரின் உன்னத சேவையைப் பாராட்டும் வகையில், குக்கூ.. குக்கூ..பாடலின் 'நர்ஸ் வெர்ஷன்' வெளியாகியுள்ளது.

’காத்திருந்தால் வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கு அப்பாவு உதாரணம்’ - குவியும் வாழ்த்துகள்

சென்னை: சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், பேரவை உறுப்பினர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

'காலில் விழுந்து கண்ணீர் விட்ட இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர்!'

இஎஸ்ஐ அரசு மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன், செவிலியர் காலில் விழுந்து வணங்கி கண்ணீர் விட்ட சம்பவம், அனைவரின் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கு கால கட்டத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ஒரு நல்வாய்ப்பு

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், வேலை நாட்களை 150 நாட்களாக உயர்த்த வேண்டும் என்பதே கிராமப்புற மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் - சென்னை மாநகராட்சி

சென்னை: மருத்துவப் பணியில் மூன்று மாதங்களுக்குத் தற்காலிகமாக பணிபுரிய, இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழ்நாடு அரசு முடிவு

உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

லால் சிங் சத்தா: பயோ பபுளை பின்பற்றி ஆமிர் கான் படப்பிடிப்பு தொடக்கம்

1994ஆம் ஆண்டு டாம் ஹேங்ஸ் நடிப்பில் வெளியான ‘பாரஸ்ட் கம்ப்’ படத்தின் ரீமேக்கான இதில் பெஞ்சமின் புஃபோர்ட் கதாபாத்திரத்தில் நாக சைத்தன்யா நடிக்கிறார். இந்த ஆண்டு கிறிஸ்துமஸையொட்டி இப்படம் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் முக்கிய நகரில் அவசர நிலை: என்ன தான் நடக்கிறது இஸ்ரேலில்?

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் பதற்றம் நிலவிவரும் சூழ்நிலையில் இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முக்கிய நகரில் அவசர நிலையை அறிவித்துள்ளார்.

ஹமாஸ் இயக்கத்தின் ராக்கெட் தாக்குதலில் கேரள பெண் பலி

ஹமாஸ் இயக்கம் கிழக்கு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் இந்தியப் பெண் உள்பட இருவர் பலியாகினர்.

ABOUT THE AUTHOR

...view details