தமிழ்நாடு

tamil nadu

கஞ்சா விற்பனை வழக்கில் 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை!

By

Published : May 29, 2022, 9:27 PM IST

மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Drugs
Drugs

சென்னை:மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சென்னை மண்டல அதிகாரிகளுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த பாக்கியம், திருமுருகன் மற்றும் பாலமுருகன் ஆகிய மூவரை சென்னையில் கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் 147 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது.

இதையடுத்து, மூவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து, மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: Video: ரயிலில் இருந்து தவறி விழுந்து மாணவர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details