தமிழ்நாடு

tamil nadu

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணிக்கு மீண்டும் கரோனா தொற்று

By

Published : Jan 18, 2022, 7:24 PM IST

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணிக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திராவிடர் கழக தலைவர் கி. வீரமணிக்கு கரோனா தொற்று
திராவிடர் கழக தலைவர் கி. வீரமணிக்கு

சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, கடந்த சில நாள்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

கரோனா தொற்றின் அறிகுறிகள் இருந்ததையடுத்து, அவருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், அவருக்கு கரோனா தொற்று மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கி. வீரமணி, கிண்டியில் உள்ள கிங்ஸ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ஏற்கெனவே, கடந்த நவம்பர் மாதம் அவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இனி வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்

ABOUT THE AUTHOR

...view details