தமிழ்நாடு

tamil nadu

ஹிஜாப் சர்ச்சை; நீதிபதிகளை மிரட்டியவர்களின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

By

Published : Apr 9, 2022, 11:05 AM IST

ஹிஜாப் விவகாரத்தில் நீதிபதிகளை மிரட்டும் விதமாக பேசியவர்களின் முன்ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

ஹிஜாப் விவகாரத்தில் நீதிபதிகளை மிரட்டியவர்களின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
ஹிஜாப் விவகாரத்தில் நீதிபதிகளை மிரட்டியவர்களின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

மதுரையைச் சேர்ந்த அசன் பாட்ஷா, அபிபுல்லா ஆகிய இருவரும் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "கோரிப்பாளையம் தர்கா முன்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் பிரச்சினை தொடர்பாக வழங்கிய தீர்ப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மத்திய அரசை மிரட்டும் விதமாக சிலர் பேசினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ரஹ்மத்துல்லா என்பவர் மட்டுமே நீதிபதிகளை மிரட்டும் விதமாக பேசினார்.

இந்நிகழ்வை ஏற்பாடு செய்தது மட்டுமே நாங்கள். இந்த வழக்கு விசாரணைக்கும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறோம். ஆகவே, இவற்றைக் கருத்தில்கொண்டு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தனர்.

இதேபோல ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அல்மாலிக் பைசல் நைனா உள்பட ஏழு பேரும் முன்ஜாமீன் கோரி மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி முரளிசங்கர் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 'மாணவர்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் மாறுதல்கள் குறித்து ஆலோசனை வழங்க நீதிமன்றம் உத்தரவு'

ABOUT THE AUTHOR

...view details