தமிழ்நாடு

tamil nadu

Late Tamil Director SP Jananathan's statue Ceremony: கரோனா திட்டமிட்ட சதி எனக்கூறியவர் எஸ்.பி.ஜனநாதன் - திருமாவளவன்

By

Published : Dec 26, 2021, 8:17 PM IST

Late Tamil Director SP Jananathan's statue Ceremony: கரோனா திட்டமிட்ட சதி என முன்கூட்டியே கண்டறிந்து கூறியவர் மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் என எஸ்.பி.ஜனநாதனின் முழு உருவச் சிலை திறப்பு விழாவில் திருமாவளவன் பேசினார்.

director sp jananathan statue ceremony held at chennai  thirumavalvan appreciate sp jananathans film  tamil late director sp jananathan made movie based communism  சென்னையில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் முழு உருவச் சிலை திறப்பு விழா  சினிமா என்பது வணிக நோக்கம் கொண்டது திருமாவளவன்
எஸ்.பி.ஜனநாதன்

சென்னை:Late Tamil Director SP Jananathan's statue Ceremony: மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் முழு உருவச் சிலை திறப்பு விழா மற்றும் 'சினிமாவில் பறந்த சிவப்புக் கொடி' எனும் ஜனநாதன் குறித்த நினைவு மலர் வெளியீட்டு விழா, சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் மன்றத்தில் நடைபெற்றது.

இதில் கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர் நல்லக்கண்ணு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நடிகர் விஜய்சேதுபதி, இயக்குநர்கள் அமீர், வ.கௌதமன், கரு.பழனியப்பன், சுசீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்தத் தலைவர் சங்கரய்யா ஆகியோர் காணொலிக் காட்சி மூலமாக பங்கேற்றுப் பேசினர்.

நிகழ்ச்சியில் பேசிய விஜய்சேதுபதி,

'நான் கம்யூனிசம் படித்ததில்லை. அது பற்றிய அறிவு எனக்கு அதிகம் கிடையாது. கம்யூனிசத்தை செயல் மூலமும், வாழ்ந்தும் காட்டியவர் ஜனநாதன். கம்யூனிசம், பெரியாரியத்தை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால், அதைப் பின்பற்றி வாழும்போதுதான் அதன் மீது பிடிப்பு ஏற்படும்.

ஜனநாதன் படங்களில் வார்த்தைகளைப் பார்த்து பார்த்து விதைப்பார், ஆயிரம் வார்த்தையை 5 வார்த்தையில் அடக்குவார். என் வாழ்வில் நான் செய்த புண்ணியம் அவரது கடைசிப் படத்தை தயாரித்தது, சாபம் அது கடைசிப் படமாக அமைந்தது' என்றார்.

தொடர்ந்து திருமாவளவன் பேசுகையில்,

'சினிமா என்பது வணிக நோக்கம் கொண்டது. திரைத்துறையில் தத்துவத்தை பேசுவது மிகவும் கடினமானது. கடினமான இடத்திலும் வெற்றிகரமாக தத்துவங்களைப் பேசியவர் ஜனநாதன்.

இன்னும் 10 ஆண்டுகாலம் வாழ்ந்திருந்தால் இந்தியளவில் கம்யூனிசம் குறித்து திரைப்படங்கள் அதிகம் கொடுத்துச் சென்றிருப்பார்.

கொள்கை, தத்துவம் என்பது வேறு வேறு. இரண்டை சார்ந்தும் அரசியல் இயக்கங்கள் இயங்குகின்றன. இட ஒதுக்கீடு என்பது கொள்கை, சமூகநீதி என்பது கோட்பாடு. மொழி உரிமை என்பது கொள்கை, தமிழ்த் தேசியம் என்பது கோட்பாடு.

கம்யூனிசத்தைப் பேசியவர் ஜனநாதன்

தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சி கம்யூனிஸ்ட் கட்சி, அதை திரைமொழியில் பேச அதிகம் அறிவாற்றல் வேண்டும். கட்சிகளை அடையாளப்படுத்தாமல் தத்துவத்தை பேசினார், ஜனநாதன்.

படங்களில் 4 குத்தாட்டம், சண்டை, காதல் காட்சி, கவர்ச்சிகரமான கதாநாயகன் கதாநாயகி, பஞ்ச் வசனம் இருக்க வேண்டும் என இயக்குநர், தயாரிப்பாளர்கள் நினைப்பார்கள். இது குறித்து யோசிக்காமல் சர்வதேச அரசியல், பொருளாதாரம், மருந்து உற்பத்தி குறித்து படங்களில் பேசியவர் ஜனநாதன். கரோனா திட்டமிட்ட சதி என முன்கூட்டியே கண்டறிந்து கூறியவர்.

கம்யூனிஸ்ட்கள் மட்டுமே சர்வதேச பார்வைகளுடன் பிரச்னைகளை அணுகுவர். இந்தப் பொறுப்புணர்வுடன் செயல்பட்டவர், ஜனநாதான்.

இங்கு திறக்கப்பட்ட ஜனநாதன் சிலையை அரசே ஏற்று பொது இடத்தில் வைக்க வேண்டும் என கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளதாக விஜய் சேதுபதி கூறினார். அனைத்துக் கட்சியினரும் இதை நிறைவேற்ற முன்வர வேண்டும்’ என்றார்.

கே.பாலகிருஷ்ணன் பேசும்போது,

'கம்யூனிஸ்ட் கட்சி பலமாக உள்ள கேரளாவை விட தமிழ்நாட்டில் கம்யூனிச கருத்துகளை திரைப்படங்கள் மூலம் அதிகம் பேச முடிகிறது.

ரஞ்சித் உள்ளிட்டோர் திரைப்படங்களில் முன்னெடுக்கும் மாற்று அரசியல் மூலம் உலக மனசாட்சியைத் தட்டி எழுப்பியுள்ளனர்.

ஆண்டி இந்தியன் படம் மதவாதிகளைப் பற்றி செறிவுடன் கூறியுள்ளது. மதம் என்பது மின்சாரம் போன்றது. அதைக் கையாள்வது கடினமானது. மாநாடு, ஜெயில், கர்ணன், அசுரன் படங்கள் புதிய செய்தியுடன் வந்துள்ளன’ என்றார்.

கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர் நல்லக்கண்ணு

கம்யூனிஸ்ட் மூத்தத்தலைவர் நல்லகண்ணு பேசுகையில், 'இயற்கை , புறம்போக்குப் படங்களை பார்த்துவிட்டு கண்ணீர் விட்டு அழுதுள்ளேன். எளிய முறையில் வாழ்ந்து காட்டியவர். புறம்போக்கு படம் தொடர்பாக ஜனநாதன், விஜய் சேதுபதியிடம் அமர்ந்து பேசும்போது இவ்வளவு பெரிய காரியத்தை செய்பவர்கள் எளிமையாக, சாதாரணமாக இருக்கிறார்களே என நினைத்து பெருமைப்பட்டேன்.

அரசியல்வாதிகள் பேசலாம் விமர்சிக்கலாம், போராடலாம். ஆனால் கருத்தியல்களை படம் மூலம் பேசியவர், ஜனநாதன். 'வெண்நிற இரவு ' என்ற ரஷ்ய நாவலை படித்த பிறகே எழுதத் தொடங்கியதாகக் கூறியுள்ளார்.

எளிய விசயங்களை, ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கையைப் படங்களில் காட்டியவர். ஜனநாதனின் வாழ்க்கை அனைவருக்கும் பாடமாக வேண்டும்’ என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன் கூறுகையில்,

'சினிமாவில் கம்யூனிஸ்ட் கட்சி பற்றி சொன்னால் பணம் வீணாகிவிடும். வெற்றி பெறாது என பயப்படுவார்கள். ஆனால், தற்போது 'சினிமாவில் பறந்த சிவப்புக் கொடி ' என்று புத்தகமே வெளியிடப்படுகிறது.

அரசியலில் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி பெற்று வருகிறார், திருமாவளவன். பொதுத் தொகுதி 2இல் வென்றுள்ளது விசிக.

உலகில் இடதுசாரி , வலதுசாரி என இரண்டே கொள்கைகள்தான் உள்ளன.

மின்சாரமும் மார்க்ஸும் அத்தியாவசியமே”

'மின்சாரம் இல்லாமல் மட்டுமில்லை, மார்க்ஸ் இல்லாமலும் உலகம் இல்லை..' என்று ஒரு கவிதையில் சொன்னார், வைரமுத்து.

இப்படி வைரமுத்து , திருமாவளவன் போல எங்களுக்கு சொல்லத் தெரியவில்லை என்பதுதான் பிரச்னை. அதனால், மக்களுக்கு எங்களை தெரிவதில்லை. மக்களிடம் எங்களைப் புரிய வைப்பதே சிரமமாக உள்ளது’ என்றார்.

இதையும் படிங்க:வடிவேலை தொடர்ந்து இயக்குநர் சுராஜ்க்கு கரோனா?

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details