தமிழ்நாடு

tamil nadu

அண்ணா பல்கலை. மாணவர்களுக்கு நேரடி பருவத் தேர்வு எப்போது?

By

Published : Nov 12, 2021, 11:54 AM IST

அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் மாணவர்களுக்கு நேரடிப் பருவத் தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது குறித்த தகவலை பல்கலைக்கழகப் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

அண்ணாப் பல்கலைக் கழக பொறியியல் மாணவர்களுக்கு நேரடி செமஸ்டர் தேர்வுகள்
அண்ணாப் பல்கலைக் கழக பொறியியல் மாணவர்களுக்கு நேரடி செமஸ்டர் தேர்வுகள்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் மாணவர்களுக்குப் பருவத் தேர்வுகள் டிசம்பர் 3ஆவது வாரத்தில் நடத்தப்படும் என பல்கலைக்கழகப் பதிவாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று காரணமாக அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

ஆன்லைன் தேர்வுகள் இல்லை

கரோனா தொற்று குறைந்துவருவதால், கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடந்துவருகின்றன. இதனால் தேர்வுகளையும் நேரடியாக நடத்துவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் ரவிக்குமார் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும்.

பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., எம்.ஆர்க்., எம்.பிளான். படிக்கும் மாணவர்களுக்கான செப்டம்பர் டிசம்பர் பருவத்திற்கான தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும். இறுதியாண்டு பொறியியல் பயிலும் மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் டிசம்பர் மூன்றாவது வாரத்தில் நேரடி முறையில் நடத்தப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'சமுதாயத்திற்கு பயன்படும் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம்' - அண்ணா பல்கலை துணைவேந்தர்

ABOUT THE AUTHOR

...view details