தமிழ்நாடு

tamil nadu

ஆண்களுக்கு தனிக் கலைக்கல்லூரி கேட்ட பெண் சட்டமன்ற உறுப்பினர்

By

Published : May 10, 2022, 11:29 PM IST

சட்டப்பேரவையில் ஆண்களுக்கு தனிக் கலைக்கல்லூரி வேண்டும் என கேட்ட சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி கேட்டுள்ளார்.

ஆண்களுக்கு தனிக் கலைக்கல்லூரி கேட்ட பெண் சட்டமன்ற உறுப்பினர்
ஆண்களுக்கு தனிக் கலைக்கல்லூரி கேட்ட பெண் சட்டமன்ற உறுப்பினர்

சென்னை:இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் மானியக் கோரிக்கை நடைபெற்றது.

இதில் வினாக்கள் விடைகள் நேரத்தில் பேசிய நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி பேசுகையில், "திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதி. இந்த பகுதியில் உள்ள மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்தி திண்டுக்கல், மதுரையில் படித்து வருகின்றனர்.

எனவே, வத்தலகுண்டு பகுதியில் அரசுக்கு சொந்தமான இடம் இருப்பதை கருத்தில் கொண்டு அங்கு புதிய ஆண்கள் கலைக்கல்லூரி ஏற்படுத்தித் தர அரசு முன் வருமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி, "இருபாலர் கல்லூரி இருக்கக்கூடிய இடத்தில் பெண்கள் கல்லூரி வேண்டும் என்கின்றனர்.

ஆண்களுக்கு தனிக் கலைக்கல்லூரி கேட்ட பெண் சட்டமன்ற உறுப்பினர்

அந்த ஊரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் தான் பெண்கள் கல்லூரி தொடங்கப்பட்டது. அங்கே பெண்கள் கல்லூரி இருப்பதால் உறுப்பினர் ஆண்களுக்கு கல்லூரி கேட்டிருக்கிறார். அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல்லுக்கு கூட்டுறவுத் துறையின் மூலமாக ஒரு கல்லூரியை பெற்றுள்ளார்.

மேலும், திண்டுக்கல் ஓரளவிற்கு கல்வி வளர்ச்சி பெற்ற மாவட்டம். எனவே, அந்த பகுதிகளுக்கு படிப்படியாக வரும் காலங்களில் நிதிநிலையை கருத்தில் கொண்டு அரசு முடிவு செய்யும்"என்றார்.

இதையும் படிங்க:மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த காவல் துறைக்கு முதலமைச்சர் பாராட்டு...

ABOUT THE AUTHOR

...view details