தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் டீசல் தட்டுப்பாடு...வாகன ஓட்டிகள் அவதி!

By

Published : Sep 5, 2022, 10:44 PM IST

சென்னையில் உள்ள பல்வேறு பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ஏற்பட்ட டீசல் தட்டுப்பாட்டால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்

ச்
ச்

சென்னை: சென்னையில் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களின் இயக்கங்களும் பெருமளவில் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், (செப்.05) திங்கள்கிழமையன்று சென்னையின் பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் டீசல் பற்றாக்குறை ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளானார்கள்.

இதற்கு, அண்மையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் பெட்ரோல், டீசல் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவும்; பெட்ரோல், டீசல் சுத்திகரிப்பை 70 விழுக்காடாக குறைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால், 70 விழுக்காடு கச்சா எண்ணெய் மட்டுமே சுத்திகரிக்கப்பட்டதால் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல், மற்ற எண்ணெய் நிறுவனங்களிலும் டீசலுக்குத் தட்டுப்பாடு காணப்படுகிறது.

வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை என்பதால் வாகன ஓட்டிகள் அதிகாலை முதலே டீசல் போட பங்கில் குவிந்தனர். டீசல் இல்லாத காரணத்தால் அவர்கள் அவதிக்குள்ளாகினர்.

இதையும் படிங்க:விஷ எறும்புகள் படையெடுப்பால் மக்கள் பீதி... கிராமத்தை காலி செய்ய முடிவு...

ABOUT THE AUTHOR

...view details