தமிழ்நாடு

tamil nadu

பல்லாவரம் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை - காவல்துறை தீவிர விசாரணை

By

Published : Mar 28, 2022, 8:46 PM IST

பல்லாவரம் தனியார் கல்லூரியில் நான்காம் ஆண்டு டிப்ளமோ பார்மசி படிப்பு படித்து வந்த மாணவி சந்தேகத்திற்கிடமான முறையில் தற்கொலையால் உயிரிழந்த சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறை விசாரணை
காவல்துறை விசாரணை

சென்னை:தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சடகோப ராமானுஜம். இவருடைய 19 வயது மகளான பவித்ரா சென்னை ஜமீன் பல்லாவரத்தில் உள்ள வேம்புலி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தனது இரண்டு தோழிகளுடன் தங்கி அங்குள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ பார்மசி (Diploma in Pharmacy) நான்காம் ஆண்டு படித்து வந்தார். வழக்கம் போல் நேற்று (மார்ச் 27) கல்லூரியை முடித்து விட்டு, வீடு திரும்பிய பவித்ரா, இரவு தான் படிக்கப்போவதாக கூறி படுக்கை அறைக்குள் சென்று வெகு நேரமாகியும் கதவை திறக்காமல் இருந்துள்ளார்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல

இதனால், சந்தேகமடைந்த அவரின் தோழிகள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துப் பார்த்தபோது, பவித்ரா தற்கொலையால் உயிரிழந்தது தெரிய வந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லாவரம் காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் மரணத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தற்கொலை தீர்வல்ல - மாணவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை

ABOUT THE AUTHOR

...view details