தமிழ்நாடு

tamil nadu

'திமுகவினருக்கு பதவி வெறி' - கே. பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

By

Published : Mar 4, 2022, 7:57 PM IST

நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை, திமுகவினர் பதவி வெறி கொண்டு பிடித்துக்கொண்டனர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

சென்னை: தியாகராயநகர்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,

'திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களை திமுகவினர் திட்டமிட்டு பறித்துக் கொண்டார்.

திமுக தலைமை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களை கீழ்மட்டத் தலைவர்கள் செயல்படுத்த வேண்டும். அதை செயல்படுத்தாமல் பதவி வெறியில் முரண்பாடுகளுடன் செயல்பட்டுள்ளது. குறிப்பாக, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் கொல்லன்கோடு நகராட்சித் தலைவர் பதவிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இன்று (மார்ச் 4) நடைபெற்ற மறைமுகத் தேர்தலில், திமுகவினர் பறித்துக்கொண்டார்.

இதுபோன்ற செயல்பாடுகள் கூட்டணிக் கோட்பாடுகளை மீறுவது ஆரோக்கியமானதல்ல. திமுக கவுன்சிலர்கள் போட்டி வேட்பாளர்களாக உடன்பாட்டை மீறி, களமிறங்கியதுடன் பல இடங்களில் தோழமைக் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உதவியுடன் வெற்றி பெற்றுள்ளனர்.

இதன்காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும் இதர கூட்டணிக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றி தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமை உரிய வகையில் இதற்குத் தீர்வு காண வேண்டும்' என அவர் கூறினார்.

கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்த சில நிமிடங்களில் திமுகவின் தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின், கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்களை கைப்பற்றிய திமுகவினர் உடனடியாக பதவி விலக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கே. பாலகிருஷ்ணன்

இதையும் படிங்க:கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்களைக் கைப்பற்றுவதா? - முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசம்

ABOUT THE AUTHOR

...view details