தமிழ்நாடு

tamil nadu

வெங்காய விலை கண்ணீரை வரவழைக்கின்றது - சிபிஐ

By

Published : Nov 27, 2019, 11:00 PM IST

சென்னை: உயர்ந்து வரும் வெங்காய விலையைக் கேட்டாலே கண்ணீர் வருகிறது என சிபிஐ கட்சி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

CPI press release  cpi on Onion price hike  cpi muththarasan statement nov 27  சிபிஐ முத்தரசன் அறிக்கை நவம்பர் 27  வெங்காய விலை உயர்வு
cpi muththarasan statement nov 27

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், “சமையலில் மிக முக்கிய பங்கு வகித்திடும் வெங்காயத்தின் விலை உயர்வு அனைவரையும் கடும் பாதிப்புக்கு ஆளாக்கியுள்ளது. வரலாறு கண்டிராத வகையில் தற்போது கிலோ ரூ.110 வரை விலை உயர்ந்துள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. குறிப்பாகத் தினக் கூலித் தொழிலாளர்கள் வெங்காயம் வாங்க முடியாத பொருளாகி விட்டது.

வெங்காயத்தை உரித்தால்தான் கண்களில் தண்ணீர் வரும் என்ற நிலை மாறி, விலையைக் கேட்டாலே கண்ணீர் விட்டுக் கதறும் நிலை ஏற்பட்டுள்ளது. வெங்காயம் பயன்படுத்துவது ஏழைக் குடும்பம், நடுத்தர குடும்பம் செல்வந்தர் குடும்பம் என்கிற பாகுபாடு இன்றி, அனைத்து தரப்பு குடும்பங்களும் பயன்படுத்தும் அத்தியாவசிய உணவுப் பொருட்களில் வெங்காயம் ஒன்று என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

வெங்காய விலையைக் கட்டுப்படுத்த அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவு!

வெங்காயத்தைத் தேவையான அளவிற்கு இறக்குமதி செய்து, விலையைக் கட்டுக்குள் கொண்டு வரவும், அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யவும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

Intro:Body:

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை.

வெங்காய விலையை கேட்டாலே கண்ணீர் வருகின்றது

சமையலில் மிக முக்கிய பங்கு வகித்திடும் வெங்காயத்தின் விலை உயர்வு அனைவரையும் கடும் பாதிப்புக்கு ஆளாக்கியுள்ளது.

வரலாறு கண்டிராத வகையில் என்றுமில்லாத அளவில் தற்போது கிலோ ரூ.110 வரை விலை உயர்ந்துள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் மிகக் கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக தினக் கூலித் தொழிலாளர்கள் வெங்காயம் வாங்க முடியாத பொருளாகி விட்டது.

வெங்காயத்தை உரித்தால்தான் கண்களில் தண்ணீர் வரும் என்ற நிலை மாறி, விலையைக் கேட்டாலே கண்ணீர் விட்டு கதறும் நிலை ஏற்பட்டுள்ளது.

வெங்காயம் பயன்படுத்துவது ஏழைக் குடும்பம், நடுத்தர குடும்பம் செல்வந்தர் குடும்பம் என்கிற பாகுபாடு இன்றி, அனைத்து தரப்பு குடும்பங்களும் பயன்படுத்தும் அத்தியாவசிய உணவுப் பொருட்களில் வெங்காயம் ஒன்று என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

வெங்காயத்தை தேவையான அளவிற்கு இறக்குமதி செய்து, விலையை கட்டுக்குள் கொண்டு வரவும், அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யவும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு பாராட்டுக்கள்

தமிழ்நாடு காவல்துறை தலைவர் திரு.திரிபாதி அவர்களுக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநில செயற்குழு தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது.

காவல்துறையில் அனைத்து கடிதங்கள், சுற்றறிக்கைகள், அனைத்தும் தமிழில் வெளியிடப்பட வேண்டும், அனைவரும் தமிழில் கையெழுத்து இடவேண்டும் என காவல்துறை தலைவர் திரு.திரிபாதி உத்தரவு இட்டு இருப்பதை வரவேற்று, பாராட்டுகின்றோம்.

காவல்துறை தலைவரின் உத்திரவை முன்மாதிரியாகக் கொண்டு, அரசின் பிற துறைகளிலும் முழு அளவில் தாய் மொழியாம் தமிழில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

அன்புள்ள



(இரா.முத்தரசன்)

மாநிலச் செயலாளர்


Conclusion:

ABOUT THE AUTHOR

...view details