தமிழ்நாடு

tamil nadu

இரண்டு நாட்களில் கோவின் தளத்தில் 'தமிழ்'

By

Published : Jun 4, 2021, 7:51 PM IST

Updated : Jun 4, 2021, 8:24 PM IST

provide tamil in cowin site, இரண்டு நாட்களில் கோவின் தளத்தில் தமிழ், cowin tamil, cowin site tamil language in two days, தமிழ்மொழி, தமிழ் மொழி, கோவின் தளம் தமிழ் மொழி
cowin site tamil language in two days

19:41 June 04

சென்னை: பெரும் எதிர்ப்புகளை அடுத்து, இன்னும் இரண்டு தினங்களில் தடுப்பூசிக்காகப் பதிவுசெய்யும் கோவின் தளத்தில் தமிழ் மொழி சேர்க்கப்படும் என ஒன்றிய அரசு சார்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் கோவின் இணையதளத்தில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே இருந்த நிலையில், இன்று(ஜூன்.4) புதிதாக ஒன்பது மொழிகள் சேர்க்கப்பட்டன. ஆனால், தொன்மையான செம்மொழி 'தமிழ்' அதில் சேர்க்கப்படவில்லை.

இது உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும் என, ஒன்றிய அரசிடம் வலியுறுத்துமாறு மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதன்படி, இந்தக் கோரிக்கையை ஒன்றிய அரசு அலுவலர்களிடம் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் வலியுறுத்தினார். 

முன்னதாக, மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசனும், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தினை பதிவு செய்திருந்தார். இதற்கு, இந்த இணைய வசதி படிப்படியாகப் பல்வேறு மாநில மொழிகளில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இன்னும் இரண்டு நாட்களுக்குள் தமிழ்மொழியிலும் இந்த வசதி செயல்படுத்தப்படும் என, ஒன்றிய அரசின் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளதாக செய்தி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Jun 4, 2021, 8:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details