தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 551 பேருக்கு கரோனா உறுதி

By

Published : Aug 28, 2021, 10:10 PM IST

தமிழ்நாட்டில் இன்று (ஆக.28) ஆயிரத்து 551 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 551 பேருக்கு கரோனா உறுதி
தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 551 பேருக்கு கரோனா உறுதி

சென்னை: கரோனா பரவல் குறித்து சுகாதாரத்துறை இன்று (ஆக.28) புள்ளி விவரங்கள் வெளியிட்டது. அதில், தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 230 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆயிரத்து 551 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 9 லட்சத்து 63 ஆயிரத்து 24 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் இருந்த 26 லட்சத்து 10ஆயிரத்து 299 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 17 ஆயிரத்து 559 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் ஆயிரத்து 768 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 57 ஆயிரத்து 884 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா உயிரிழப்பு

தனியார் மருத்துவமனையில் 9 நோயாளிகள், அரசு மருத்துமனையில் 12 நோயாளிகள் என 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 856 ஆக உயர்ந்துள்ளது.

கோயம்புத்தூரில் புதிதாக 230 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் ஈரோட்டில் 115 பேர், சென்னையில் 182 பேர், செங்கல்பட்டில் 122 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 24 மணி நேரத்தில் 1 கோடி பேருக்கு தடுப்பூசி... 509 பேர் கரோனாவால் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details