தமிழ்நாடு

tamil nadu

முதலமைச்சரின் அழைப்பு மையத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திடீர் ஆய்வு

By

Published : Jul 26, 2022, 3:54 PM IST

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள முதலமைச்சர் அழைப்பு மையத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகளை ஏற்று கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

cm
cm

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலில், சென்னை வேளச்சேரியில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து சோழிங்கநல்லூர் அருகே உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இல்லம் திரும்பும் வழியில் சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் அழைப்பு மையத்தில் (CM Call Centre) ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், மருத்துவ உதவி தொடர்பாக முதலமைச்சரின் உதவி எண்ணை தொடர்பு கொண்ட நிலையில், அவருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. அவரிடம் பேசிய முதலமைச்சர், உடல் நலம் குறித்து விசாரித்தார்.

புதுக்கோட்டை மாவட்ட துணை ஆணையர் ஒருவரை தொடர்பு கொண்டு பேசிய முதலமைச்சர், உதவி எண் மையத்தில் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தாமதமாவது ஏன்? என கேள்வி எழுப்பினார். பிற மாவட்டங்களைப் போல புதுக்கோட்டை மாவட்டத்திலும் மக்களின் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

பொதுமக்களின் தொலைப்பேசி அழைப்புகளை ஏற்ற முதலமைச்சர் ஸ்டாலின்

அதைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட அரசு அலுவலர்களை தொடர்பு கொண்டு பேசிய அவர், திருப்பூர் மாவட்டத்தில் பொது மக்களின் புகார்களுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டு வருவதற்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:'தமிழ்நாடு பீகார் ஆகியிருக்கும்...' கிறிஸ்துவ மத போதகர்கள் குறித்த அப்பாவு பேச்சுக்கு பாஜக எதிர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details