தமிழ்நாடு

tamil nadu

அண்ணா பல்கலை.க்கு சிறப்புத் தகுதி - மத்திய அரசு சூழ்ச்சி எனப் புகார்!

By

Published : Jan 8, 2020, 10:26 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதி வழங்கி மத்திய அரசு தனது கட்டுபாட்டில் வைத்துக்கொள்ள துடிப்பதாக தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும், திரைப்பட இயக்குநருமான கௌதமன் குற்றம்சாட்டியுள்ளார்.

university
university

இதுகுறித்து, தலைமைச் செயலகத்திலுள்ள முதல்வர் தனிப்பிரிவில் மனு அளித்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த கௌதமன், ” தமிழினத்தை அழிக்கும் செயலில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் விவசாயிகள், மீனவர்கள் உரிமை பறிக்கப்பட்டுவரும் நிலையில், கல்வி உரிமையையும் பறிக்க மத்திய அரசு முயல்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதியை மத்திய அரசு கொடுத்துவிட்டு, தமிழக மாணவர்களின் சேர்க்கையை தடுக்கப் பார்க்கிறது. ஐஐடி கல்வி நிறுவனம் மத்திய அரசிடம் இருப்பது போல், அண்ணா பல்கலைக்கழகமும் மத்திய அரசிடம் சென்றால், ஏழை மாணவர்கள் படிக்க முடியாத சூழல் உருவாகும். தமிழக அரசு இதற்கு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் “எனத் தெரிவித்தார்.

’அண்ணா பல்கலைக்கழகத்தை தனதாக்க மத்திய அரசு துடிக்கிறது’
Intro:Body:அண்ணா பல்கலைகழகத்திற்க்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கி மத்திய அரசு கட்டுபாட்டில் வைத்துக்கொள்ள துடிப்பதாக தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச்செயலாளர் கௌதமன் குற்றம்சாட்டியுள்ளார்

தலைமைசெயலகத்தில் இதுகுறித்து முதல்வர் தனிப்பிரிவில் மணுக்கொடுத்தபிறகு செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய கௌதமன், தமிழனித்தை அழிக்கும் செயலில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டுவருவதாக குற்றம்சாட்டினார். தமிழகத்தில் விவசாயம், மீனவர்கள் உரிமைகள் பறிக்கப்பட்டுவரும் நிலையில் கல்வி உரிமையும் பறிக்க மத்திய அரசு முயல்வதாக தெரிவித்தார். அண்ணா பல்கலைகுகழகத்திற்க்கு சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு கொடுத்துவிட்டு தமிழக மாணவர்களின் சேர்க்கையை தடுக்கபார்ப்பதாக எச்சரித்தார். ஐஐடி மத்திய அரசு இருப்பது போல், அண்ணா பல்கழகமும் சென்றால் ஏழை மாணவர்கள் படிக்க முடியாத சூழல் உருவாகும் என்றும், தமிழக அரசு இதற்க்கு நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூறினார்.Conclusion:

ABOUT THE AUTHOR

...view details