தமிழ்நாடு

tamil nadu

500 பெண்களுக்கு இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை - தனியார் மருத்துவமனை அறிவிப்பு

By

Published : Feb 13, 2021, 11:08 AM IST

சென்னை: குரோம்பேட்டை ரெலா மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு!
குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு!

இந்தியாவில் 28 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதனால் ஆண்டுக்கு ஏழு லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அதில் நாற்பத்தி ஐந்தாயிரத்திற்க்கும் மேற்பட்ட பெண்கள் உயிர் இழக்கிறார்கள்.

மார்பக புற்றுநோய் பாதிப்பை எளியமுறையில் தவிர்க்கலாம் என்றும் டிஜிட்டல் மெமோகிராம் கருவியை கொண்டு மிகநுண்ணிய புற்றுநோய்கட்டிகளை கண்டுபிடித்துவிடலாம் என தெரிவிக்கின்றனர். இந்த பாதிப்பு முன்கூட்டியே கண்டுபிடித்துவிட்டால் நூறு சதவிகிதம் முற்றிலும் குணப்படுத்திவிடலாம் ஆகையால் பெண்கள் கூச்சப்படாமல் முன்வந்து மெமோகிராம் பரிசோதனை செய்துகொண்டால் உயிர் இழப்பை தவிர்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தற்போது ரெலா மருத்துவமனையில் உள்ள டிஜிட்டல் மெமோகிராம் மூலம் வலி இல்லாமல் பரிசோதனை செய்துகொள்ளலாம். மார்பக புற்றுநோயை எளியமுறை கண்டறியும் டிஜிட்டல் மெமோகிராம் பரிசோதனை முதல் ஐந்நூறு பெண்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்யப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க...டியூசன் எடுக்க இடமில்லை... சாலையோர மாணவர்களுக்கு கல்வி கற்று தரும் இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details