தமிழ்நாடு

tamil nadu

இழுத்து மூடப்பட்ட சரவணா ஸ்டோர்

By

Published : Jan 7, 2022, 11:50 PM IST

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் பணிபுரிந்த 30 பணியாளர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அக்கடையை மூட செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

saravana stores chrompet
இழுத்து மூடப்பட்ட சரவணா ஸ்டோர்

சென்னை: கரோனா தொற்றுக் காரணமாக தமிழ்நாடு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், குரோம்பேட்டை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் பணிபுரிந்த 250 பணியாளர்களின் 30 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சூப்பர் சரவணா ஸ்டோர் கடையை மூட செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் தமிழ்நாட்டில் இன்று(ஜன.7) புதிதாக 8,981 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: 'அம்மா என்னை மன்னித்துவிடு' - மூக்கனேரியில் இளம்பெண் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details