தமிழ்நாடு

tamil nadu

பள்ளி மாணவர்களுக்குத் தடுப்பூசி - தொடங்கிவைத்த ஸ்டாலின்

By

Published : Jan 3, 2022, 3:59 PM IST

தமிழ்நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயதிற்குள்பட்டவர்களுக்கு விரைந்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: சைதாப்பேட்டை மாந்தோப்பில் உள்ள மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 15 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதில் உடன் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளரைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், “தமிழ்நாட்டிற்கு இன்று மிக முக்கியமான நாள். சைதாப்பேட்டை பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக வந்து 15 முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் முகாமைத் தொடங்கிவைத்துள்ளார்.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அடுத்த 10 நாள்களுக்குள் தடுப்பூசி செலுத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் முகாம் அமைக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மூன்றாயிரத்து 870 மேற்பட்ட தடுப்பூசி மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. அருகில் உள்ள முகாமில் மாணவர்களுக்கு சிறப்பு வரிசைகள் பின்பற்றப்பட்டு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

கரோனா தொற்று கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. பொதுமக்கள் பதற்றம் அடையாமல் முகக்கவசம் அணிய வேண்டும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் சிறார்களுக்கு தடுப்பூசி- முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கிவைத்தார்

ABOUT THE AUTHOR

...view details