தமிழ்நாடு

tamil nadu

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வாழ்த்து தெரிவித்த மாநில முதல்வர்கள்

By

Published : Jul 28, 2022, 1:15 PM IST

செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடைபெற கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநில முதலமைச்சர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

செஸ்  ஒலிம்பியாட் போட்டிக்கு வாழ்த்து தெரிவித்த மாநில முதல்வர்கள்
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வாழ்த்து தெரிவித்த மாநில முதல்வர்கள்

சென்னை:சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி 44-வது சர்வதேச சதுரங்கப் போட்டியினை தொடங்கி வைக்கிறார். இத்தொடக்க விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு, சிக்கிம் மாநில முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் ஆகியோர் இச்சர்வதேச சதுரங்க போட்டி சிறப்பாக நடைபெற தங்களது வாழ்த்துகளை தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மேலும், கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, தமிழ்நாடு முதலமைச்சரை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு சர்வதேச சதுரங்க போட்டி சிறப்பாக நடைபெற தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் ஆகியோர் சமூக வலைத்தளம் மூலம் சர்வதேச சதுரங்க போட்டி சிறப்பாக நடைபெற வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா - கலை நிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்த 4 பேருக்கு கரோனா

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details