தமிழ்நாடு

tamil nadu

தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயத்தின் நிலுவை வழக்குகள் - ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு

By

Published : Nov 18, 2021, 9:56 AM IST

தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயத்தின், சென்னை அமர்வில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து அறிக்கைத் தாக்கல்செய்ய ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

national company law tribunal, chennai high court questions, cases pending before national company law, pending cases, chennai high court, court news tamil, high court news, சென்னை உயர் நீதிமன்ற செய்திகள், நீதிமன்ற செய்திகள், தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம், நீதிமன்றம் உத்தரவு
தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் நிலுவை வழக்குகள்

சென்னை: சென்னையில் உள்ள தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயத்தின் இரு அமர்வுகளில் உள்ள காலியிடங்களை நிரப்பக் கோரியும், மூன்றாவது அமர்வை அமைக்கக் கோரியும் சென்னையைச் சேர்ந்த வெங்கட சிவகுமார் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, காலியிடங்களை நிரப்ப, விண்ணப்பங்கள் வரவேற்று விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், மூன்றாவது அமர்வு அமைப்பது என்பது குடியரசுத் தலைவரின் தனி அதிகாரத்துக்குள்பட்டது எனவும் ஒன்றிய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், காலியிடம் நிரப்பியது குறித்தும், சென்னை அமர்வுகளில் நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்தும் அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 23ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:சொல்லாமல் சென்றதற்கு மன்னியுங்கள் - தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி உருக்கமான கடிதம்

ABOUT THE AUTHOR

...view details