தமிழ்நாடு

tamil nadu

அதிமுக சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி

By

Published : Apr 30, 2022, 10:12 AM IST

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மே தின பொதுக்கூட்டத்தை நடத்த அதிமுக-விற்கு அனுமதி வழங்கியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், போதிய பாதுகாப்பை வழங்க கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

aiadmk-got-permission-of-conduct-public-meeting-on-may-day-celebration-from madras high court  பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மே தின பொதுக்கூட்டத்தை நடத்த அதிமுக-விற்கு உயர் நீதிமன்றம் அனுமதி
aiadmk-got-permission-of-conduct-public-meeting-on-may-day-celebration-from madras high court பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மே தின பொதுக்கூட்டத்தை நடத்த அதிமுக-விற்கு உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: அதிமுக விழுப்புரம் நகர செயலாளர் எம்.பாபு என்பவர் தொடர்ந்த வழக்கில், மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினத்தன்று மே தின பொதுக் கூட்டங்களை நடத்த வேண்டுமென அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவுறுத்தியதன் பேரில், அதிமுக மற்றும் அதிமுக தொழிற்சங்க பேரவை இணைந்து கள்ளக்குறிச்சியில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் உள்ள முத்துசாமி என்பவரின் இடத்தில் மே தின கொண்டாட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு அனுமதி கோரி ஏப்ரல் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரிடம் விண்ணப்பித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி

அந்த விண்ணப்பத்தைப் பரிசீலிக்காமல் காவல்துறை அலைக்கழிப்பதாக மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே தனியார் நிலத்தில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மே தின கொண்டாட்டங்களை நடத்து அனுமதி வழங்கும்படி கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி-க்கும் ஆய்வாளருக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று (ஏப்ரல்.29) விசாரணைக்கு வந்தபோது, கரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும், அனுமதி பெற்று வைக்கப்படும் பேனர்கள் பதாகைகள் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது, சாலையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அதிமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கூட்டத்திற்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'அமைச்சர்தான் வம்பிழுக்கிறார்' - நீட் குறித்த விவாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

ABOUT THE AUTHOR

...view details