தமிழ்நாடு

tamil nadu

ஆன்லைன் சூதாட்டம்: துப்பாக்கியால் சுட்டு ஆயுதப்படை காவலர் தற்கொலை

By

Published : May 8, 2022, 10:10 AM IST

அம்பத்தூர் கள்ளிக்குப்பம் அருகே ஆயுதப்படை காவலர் பாதுகாப்பு பணியில் இருக்கும் போதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

துப்பாக்கியால் சுட்டு ஆயுதப்படை காவலர் தற்கொலை
துப்பாக்கியால் சுட்டு ஆயுதப்படை காவலர் தற்கொலை

அம்பத்தூர் கள்ளிக்குப்பம் அருகே ஆயுதப்படை காவலர் சரவணன்குமார்(30) என்பவர் பாதுகாப்பு பணியில் இருக்கும் பொழுதே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டம் விளையாட்டில் அதிகமாக பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியை சேர்ந்த இவர் ஆவடி பூம்பொழில் நகரில் நேரு தெருவில் தங்கி காவல் துறையில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு ஸ்வேதா என்பவருடன் கடந்த 6 மாதத்திற்கு முன் திருமணம் ஆனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆயுதப்படை காவலர் சரவணகுமார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது கையிலிருந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், சரவணகுமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் காவல் துணை ஆணையர் மகேஷ், உதவி ஆணையர் கனகராஜ், ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட காவல் துறை அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:விசாரணைக் கைதி விக்னேஷ் கொலை வழக்கு: மேலும் 4 காவலர்கள் அதிரடி கைது

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details