தமிழ்நாடு

tamil nadu

வரும் ஜூலை 10ஆம் தேதி பக்ரீத் பண்டிகை - அரசு தலைமை காஜி அறிவிப்பு!

By

Published : Jul 1, 2022, 8:40 PM IST

தமிழ்நாட்டில் வரும் 10ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் அறிவித்துள்ளார்.

ஜூலை 10 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை
ஜூலை 10 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை

'பக்ரீத்' எனப்படும் ஈகைத் திருநாள் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இதனைத்தொடர்ந்து இறைத்தூதரான நபியின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், 12ஆவது மாதமான துல்ஹஜில் மாதத்தில் பக்ரீத் கொண்டாடப்படுகிறது.

துல் ஹஜ் மாதத்துக்கான புதிய பிறை சென்னையில் நேற்று(ஜூன்.30) தென்பட்டதாகவும், ஆகையால் வரும் 10ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் எனவும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனை அரசு தலைமை காஜி சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் அறிவித்துள்ளார். மேலும் பக்ரீத் பண்டிகையன்று தமிழ்நாடு அரசு சார்பில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:திருடுபோன தமிழின் முதல் பைபிள் - லண்டனில் கண்டுபிடிப்பு

ABOUT THE AUTHOR

...view details