தமிழ்நாடு

tamil nadu

40 ஆண்டுகளுக்கு பின் ஆசான்களை கவுரவித்த மாணவர்கள்!

By

Published : Jan 10, 2020, 3:09 PM IST

சென்னை: பொறியியல் பட்டப்படிப்பில் தங்களுக்கு கற்றுக்கொடுத்த பேராசிரியர்களை 40 ஆண்டுகள் கழித்து அழைத்து அழகப்ப செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் கவுரவித்தனர்.

teachers
teachers

1974முதல் 1979ஆம் ஆண்டுவரை அண்ணா பல்கலைக்கழகத்தின் அழகப்ப செட்டியார் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில், கெமிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல்ஸ் அண்ட் லெதர் தொழில்நுட்பம் ஆகிய பாடப்பிரிவுகளில் படித்த மாணவர்கள் சென்னையில் இன்று மீண்டும் சந்தித்தனர். அப்பொழுது தங்களுக்கு பொறியியல் தொழில்நுட்ப பாடத்தினை கற்பித்த பேராசிரியர்களை அழைத்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

40 ஆண்டுகள் கழித்து பழைய மாணவர்கள் ஒன்றுகூடி தங்களுக்குள் பழைய நினைவுகளைப் பரிமாறிக்கொண்டனர். அவர்கள் தங்களின் பழைய நண்பர்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் கட்டித்தழுவிக்கொண்டனர். இதற்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, மஸ்கட் போன்ற நாடுகளில் பணிபுரிந்துவரும் முன்னாள் மாணவர்கள் வந்திருந்தனர்.

இச்சந்திப்பு குறித்து கண்ணா என்பவர் கூறும்போது, ”முன்னாள் மாணவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பொறியியல் துறையில் வேலைவாய்ப்பு ஏற்ற இறக்கத்துடன் இருந்துவருகிறது. அவ்வப்போது ஏற்படும் தேவைக்கேற்ப வேலை வாய்ப்பானது அதிகரிக்கும். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஒப்புயர்வு அளிக்கப்பட உள்ளது என்பது மகிழ்ச்சியாக உள்ளது. சென்னை ஐஐடி சிறந்த நிறுவனம் என கூறிவருகின்றனர். அண்ணா பல்கலைகழகம் அதைவிட சிறந்த நிறுவனம்" எனத் தெரிவித்தார்.

அமெரிக்காவில் வாழும் முன்னாள் மாணவர் ரவி கூறும்போது, ”அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் பட்டம் முடித்துவிட்டு அமெரிக்கா சென்று முதுகலைப்பட்டம் பெற்றோம். நாங்கள் மேலும் படித்து அறிவினை வளர்த்துக் கொண்டோம். ஆனால் தற்போதுள்ள மாணவர்கள் இளங்கலை முடித்தவுடன் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் செல்கின்றனர். அவ்வாறு இல்லாமல் தங்களின் அறிவை மேலும் அவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்“ எனக் கூறினார்.

இவர்களுக்கு கற்பித்த பேராசிரியர் கஸ்தூரி கூறும்போது, ”நாங்கள் கற்பித்த மாணவர்களை தற்போது பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. மாணவர்களில் சிலரை அடையாளம் காண முடியவில்லை. அவர்களும் வாழ்ந்து முடித்துவிட்டு வந்துள்ளனர். மாணவர்கள் நாங்கள் கற்பித்தவற்றைக் கூறி நினைவுபடுத்துவது மகிழ்ச்சியாக உள்ளது“ என்றார்.

40 ஆண்டுகளுக்கு பின் ஆசான்களை கவுரவித்த மாணவர்கள்

இதையும் படிங்க: விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் கீழடிக்கு சென்ற பொதுமக்கள்

Intro:40 ஆண்டுகளுக்கு பின்னர் பேராசிரியர்களை
கவுரவித்த பொறியியல் மாணவர்கள்


Body:சென்னை,
பொறியியல் பட்டப் படிப்பில் தங்களுக்கு கற்றுக்கொடுத்த பேராசிரியர்களை 40 ஆண்டுகள் கழித்து அழைத்து அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் கவுரவித்தனர்.


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 1974 முதல் 79 வரை அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் கெமிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல்ஸ் அண்ட் லெதர் தொழில்நுட்பம் ஆகிய பாடப்பிரிவுகளில் படித்த மாணவர்கள் சென்னையில் இன்று மீண்டும் சந்தித்தனர்.
இப்பொழுது தங்களுக்கு பொறியியல் தொழில்நுட்ப பாடத்தினை கற்பித்த பேராசிரியர்களை அழைத்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

40 ஆண்டுகள் கழித்து பழைய மாணவர்கள் ஒன்றாக கூடி தங்களுக்குள் பழைய நினைவுகளை பரிமாறிக்கொண்டனர். இதற்காக அமெரிக்கா ,ஆஸ்திரேலியா, கென்யா ,மஸ்கட் போன்ற வெளிநாடுகளில் பணிபுரிந்துவரும் முன்னாள் மாணவர்கள் வந்திருந்தனர். அவர்கள் தங்களின் பழைய நண்பர்களை பார்த்ததும் மகிழ்ச்சியில் கட்டித்தழுவி ஒருவருடன் கூறுவர் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.


முன்னாள் மாணவர்கள் சந்திப்பு குறித்து கண்ணா கூறும்பொழுது, முன்னாள் மாணவர்களை சந்தித்து மகிழ்ச்சி அளிக்கிறது. பொறியியல் துறையில் வேலைவாய்ப்பு ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அவ்வப்போது ஏற்படும் தேவைக்கேற்ப வேலை வாய்ப்பானது அதிகரிக்கும். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஒப்புயர்வு அந்த அளிக்கப்பட உள்ளது என்பது மகிழ்ச்சியாக உள்ளது. சென்னை ஐஐடி சிறந்த நிறுவனம் என கூறிவருகின்றனர். அண்ணா பல்கலைகழகம் அதைவிட சிறந்த நிறுவனம் என தெரிவித்தார்.

அமெரிக்காவில் வாழும் முன்னாள் மாணவர் ரவி கூறும்பொழுது, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் பட்டம் படித்து விட்டு அமெரிக்கா சென்று முதுகலைப்பட்டம் பெற்றோம். நாங்கள் மேலும் படித்த அறிவினை வளர்த்துக் கொண்டோம். ஆனால் தற்பொழுது உள்ள மாணவர்கள் இளங்கலை முடித்தவுடன் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் செல்கின்றனர். அவ்வாறு இல்லாமல் மேலும் தங்களின் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என கூறினார்.

இவர்களுக்கு கற்பித்த பேராசிரியர் கண்மணி கூறும்பொழுது, நாங்கள் கற்பித்த மாணவர்களை தற்போது பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. மாணவர்களில் சிலரை அடையாளம் காண முடியவில்லை. அவர்களும் வாழ்ந்து முடித்து விட்டு வந்துள்ளனர். மாணவர்கள் நாங்கள் கற்பித்தவற்றை கூறி நினைவுபடுத்துவது மகிழ்ச்சியாக உள்ளது.

மாணவர்களை கற்பிக்கும் பொழுது கண்டிப்புடன் கற்பிப்போம். மாணவர்களுக்கு கற்பிக்கும் பொழுது கண்டிப்பு தேவையாக உள்ளது. அடிக்கும் கைதான் அணைக்கும் என்பார்கள் அதுபோன்று அவர்களுக்கு அரவணைப்பும் தேவை என கூறினார்.





Conclusion:

ABOUT THE AUTHOR

...view details