தமிழ்நாடு

tamil nadu

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்: திமுக, அதிமுக, பாஜக அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியல் வெளியீடு

By

Published : Feb 1, 2022, 12:49 AM IST

Updated : Feb 1, 2022, 1:40 AM IST

நகர்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலையும், அதிமுக மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியலையும், பாஜக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியீட்டுள்ளது.

Urban Local Body Election
நகர்புற உள்ளாட்சித் தேர்தல்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல்கள் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தற்போது, வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள வருகின்ற 4ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் இன்று (ஜனவரி 31) ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும், இன்றுடன் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியலை திமுக தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கும்படி கோரப்பட்டிருந்தது. அதன்படி இன்று மாலை, திமுக சார்பில் போட்டியிடும் மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

திமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்

காஞ்சிபுரம், கும்பகோணம், தூத்துக்குடி, திருக்கோவிலூர், விழுப்புரம், கோட்டக்குப்பம், கோவில்பட்டி, மதுராந்தகம் மற்றும் சுவாமிமலை, பாபநாசம், திருப்பனந்தாள், விளாத்திகுளம், அம்மாபேட்டை, விக்கிரவாண்டி, கடம்பூர், வளவனூர், புதூர் பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

திமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்

அரக்கோணம், இராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, மேல்விஷாரம், சோளிங்கர், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, அம்பாசமுத்திரம், களக்காடு, விக்கிரமசிங்கபுரம் ஆகிய நகராட்சிகளுக்கும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தக்கோலம், நெமிலி, பனப்பாக்கம், காவேரிப்பாக்கம், கலவை, விளாப்பாக்கம், திமிரி, அம்மூர், திருவலம், பென்னாத்தூர், பள்ளிகொண்டா, ஒடுகத்தூர், மூலக்கரைப்பட்டி, நான்குநேரி, ஏர்வாடி, மணிமுத்தாறு, பணகுடி, வடக்கு வள்ளியூர், திசையன்விளை, திருகுறுங்குடி, கோபாலசமுத்திரம், சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், பத்தமடை, மேலச்செவல், நாரணம்மாள்புரம், சங்கர் நகர், பெருங்குளம், சாயபுரம், ஏரல், சாத்தான்குளம், ஆழ்வார்திருநகரி, திருவைகுண்டம், ஆத்தூர், ஆறுமுகநேரி, கானம், தென்திருப்பேரை, நாசரேத், உடன்குடி ஆகிய பேரூராட்சிகளுக்கும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வெல்லமண்டி நடராஜனின் மகன் போட்டி

பாஜக - அதிமுக இடையே நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு கடந்த இரு தினங்களாக (ஜன. 29, 30) ஆலோசனை நடைபெற்ற நிலையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் நேற்று (ஜன. 31) காலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக தலைமை கழகம் வெளியிட்டது.

இந்த பட்டியலில், ஆவடி, திருச்சி, மதுரை, சிவகாசி, தூத்துக்குடி மாநகராட்சிகள், தேனி, சேலம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, ஈரோடு, திருச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இடம்பெற்றுள்ளன. அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவஹர்லால் நேரு, திருச்சி மாநகரில் 20ஆவது வார்ட்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட உள்ளார்.

கவுன்சிலர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன் போட்டி

மேலும், அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக தனித்துப் போட்டியிடும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்த நிலையில், மூன்றாம் கட்ட வேட்பாளரை அதிமுக நேற்றிரவு (ஜன. 31) வெளியிட்டது.

இதில், காஞ்சிபுரம், வேலூர், ஓசூர், கும்பகோணம், தஞ்சாவூர், ஈரோடு, நாகர்கோவில் ஆகிய மாநகராட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, நேற்று முன்தினம் (ஜன. 30) அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

பாஜகவும் ரெடி

திமுக, அதிமுகவை தொடர்ந்து பாஜகவும் தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. சென்னை, கோயம்புத்தூர், ஓசூர், திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, சேலம், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, நாகர்கோவில், திருச்சி, கடலூர் ஆகிய மாநகராட்சிகளின் வார்டு உறுப்பினர் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

மேலும், குன்னூர், கூடலூர், நெல்லியாளம், உதகை, திருச்செங்கோடு, நாமக்கல், தருமபுரி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், திருச்செந்தூர் ஆகிய நகராட்சிகளுக்கும், கம்பைநல்லூர், பாலகோடு, கரிமங்களம் உள்ளிட்ட 8 பேரூராட்சிகளுக்கும் வார்டு உறுப்பினர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சிங்கம் சிங்கிளாதான் நிக்கும் - அதிமுக

Last Updated :Feb 1, 2022, 1:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details