தமிழ்நாடு

tamil nadu

இனி அரசியலில் ஈடுபடப்போவது இல்லை - நடிகர் நெப்போலியன் திட்டவட்டம்!

By

Published : Sep 18, 2022, 5:18 PM IST

இனி அரசியலில் ஈடுபடப்போவது இல்லை என நடிகர் நெப்போலியன் தெரிவித்துள்ளார்.

இனி அரசியலில் ஈடுபடப்போவது இல்லை
இனி அரசியலில் ஈடுபடப்போவது இல்லை

செங்கல்பட்டுமாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஜீவன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கும் விழா மற்றும் 23-ஆவது ஆண்டு தொடக்க விழா நேற்று(செப்.17) இரவு நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அதன் நிறுவனரும் நடிகருமான நெப்போலியன் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'நான் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருந்த போதும், சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும், மத்திய அமைச்சராக இருந்தபோதும் தொடர்ந்து இளைஞர்கள் வேலை வாய்ப்பு கேட்டுக்கொண்டிருந்தனர்.

எனவே, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் ஜீவன் டெக்னாலஜி கம்பெனி நிறுவப்பட்டது. மேலும் குழந்தையின் உடல் நலக்குறைவால் சினிமா தொழிலில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை. அரசியலிலிருந்து விலகி ஏழு ஆண்டுகளாகிறது.

இனி அரசியலில் ஈடுபடப்போவது இல்லை - நடிகர் நெப்போலியன் திட்டவட்டம்!

இனி அரசியலுக்கு வரமாட்டேன். ஜீவன் டெக்னாலஜியின் அடுத்த கிளையை திருச்சியில் தொடங்க உள்ளோம். அடிப்படையில் விவசாய குடும்பத்தைச்சார்ந்து, நான் உள்ளதால் விவசாயம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் உள்ளது' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'இனி நான் உங்கள் கால்களில் விழுவேன்...!' - ராகவா லாரன்ஸ்

ABOUT THE AUTHOR

...view details