தமிழ்நாடு

tamil nadu

'பீஸ்ட்' படம் ரிலீஸ் ஆகிய நிலையில் பிஸ்தாவாக 50ஆவது நாளை கடந்து சாதித்த 'வலிமை'!

By

Published : Apr 14, 2022, 5:46 PM IST

நடிகர் அஜித் குமாரின் திரைப்படமான "வலிமை" 50ஆவது நாளை கடந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

வலிமை
வலிமை

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார், கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்து கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம், வலிமை. இப்படம் வெளியாகி உலகம் முழுவதும் கணிசமான வரவேற்பைப் பெற்றது.

கரோனா ஊரடங்கிற்குப் பிறகு இந்தாண்டு வெளியான பெரிய நடிகரின் படம் என்பதால் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இருப்பினும் கலவையான விமர்சனங்களை வலிமை திரைப்படம் பெற்றது.

இந்த நிலையில் வலிமை திரைப்படம் நேற்றுடன் 50ஆவது நாளை கடந்தது. ஓடிடியில் வெளியான நிலையில் தமிழ்நாட்டில் இன்னும் சில திரையரங்குகளில் வலிமை திரைப்படம் ஓடி வருகிறது. இந்த நிலையில் 50ஆவது நாளை கடந்துவிட்ட வலிமை திரைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: வலிமை படம் ரூ.200 கோடி வசூல்

ABOUT THE AUTHOR

...view details