தமிழ்நாடு

tamil nadu

மேயரை எப்படி அழைக்க வேண்டும்...? - அமைச்சர் விளக்கம்

By

Published : Mar 5, 2022, 4:20 PM IST

மேயரை மாண்புமிகு மேயர் என அழைக்க வேண்டுமா அல்லது வணக்கத்திற்குரிய மேயர் என அழைக்க வேண்டுமா என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது
கரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது

சென்னை: கே.கே.நகரில் 23-ஆவது மெகா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்," தமிழ்நாட்டில் இன்று(மார்ச்.05) 23-ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 3,72,41,003 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 16 முதல், போடப்பட்ட தடுப்பூசிகள் எண்ணிக்கை 10,00,30,346 ஆக உள்ளது.

முதல் தவணை தடுப்பூசி 91.54% பேரும், 2ஆம் தவணை தடுப்பூசியை 72.62% பேரும் செலுத்தியுள்ளனர். 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் 71% பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை 8,45,289 பேர் செலுத்த தகுதியானவர்களாக உள்ளனர்.

அதில் 6 லட்சம் பேர் செலுத்தியுள்ளனர். மேயரை அழைக்கும் பொழுது, வணக்கத்திற்குரிய என்று அழைக்க வேண்டும். ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் வணக்கத்திற்குரிய என்ற வார்த்தையை நீக்கி, சென்னை மேயரை மாண்புமிகு என்று அழைக்க வேண்டும் என மாற்றினர்.

23 ஆவது கரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது

அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தனக்கு மேல் யாரும் இருக்க கூடாது என்று நினைத்து, மாண்புமிகு என அரசாணை வெளியிட்டார். மேயருக்கு பல சிறப்பு அதிகாரங்கள் உள்ளது. தபேதார் என்ற பட்டம் பல உதவியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், ஜமேதார் என்ற பட்டம் ஆளுநர், முதலமைச்சர், மேயர் ஆகியோரின் உதவியாளர்களுக்கு மட்டுமே உள்ளது. இதனால் இனி மேயரை வணக்கத்திற்குரிய மேயர் என அழைக்க வேண்டும் என்பது குறித்து முதலமைச்சர் பரிசீலிப்பார்.

உக்ரைனிலிருந்து வந்த தமிழ்நாடு மருத்துவ மாணவர்களுக்கு முடிந்த வரை, தமிழ்நாடு அரசு உதவி செய்யும். தமிழ்நாடு அரசின் குழு உக்ரைன் சென்றிருப்பது அரசியல் ஆதாயத்திற்கு என்று அண்ணாமலை கூறியிருக்கிறார்.

ஒன்றிய அரசுக்கு உதவியாக தான் தமிழ்நாடு அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவை அனுப்பி உள்ளது. அண்ணாமலை பேசுவது தமிழ்நாடு மக்கள் மனதை எவ்வளவு புண்படுத்தும் என்பதை உணர்ந்து பேச வேண்டும்" என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சட்டபேரவை உறுப்பினர் பிரபாகர் ராஜா, சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:ஏடிஎம் மையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பணம் ஒப்படைப்பு; செய்தியாளருக்கு குவியும் பாராட்டு!

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details