தமிழ்நாடு

tamil nadu

ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்தடைந்த 1,26,000 கோவாக்சின் தடுப்பூசிகள்

By

Published : Jun 12, 2021, 10:37 AM IST

ஹைதராபாத்: தெலங்கானாவின் ஹைதராபாத்திலிருந்து மூன்றாவது நாளாக ஒரு லட்சத்து 26 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்தன.

ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்தடைந்த 1,26,000 கோவாக்சின் தடுப்பூசிகள்
ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்தடைந்த 1,26,000 கோவாக்சின் தடுப்பூசிகள்

தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளைச் செலுத்த தமிழ்நாடு அரசு முடிவுசெய்தது. இந்தத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார்.

ஒன்றிய அரசிடமிருந்து தேவையான தடுப்பூசிகள் முழுமையாக வரவில்லை என்றும், தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக வழங்குங்கள் எனவும் தமிழ்நாடு அரசு கோரிக்கைவிடுத்தது.

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசும் தமிழ்நாட்டிற்குத் தடுப்பூசிகளை அனுப்புகிறது.

இதுவரை ஒன்றியத் தொகுப்பிலிருந்தும், தமிழ்நாடு அரசின் கொள்முதல் மூலமும் ஒரு கோடியே மூன்று லட்சம் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை சுமார் 98 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மக்களுக்குப் போட தடுப்பூசிகள் இல்லாததால் மூடப்பட்டன. இதனால் தமிழ்நாட்டிற்கு கூடுதலாகத் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக நான்கு லட்சத்து 64 ஆயிரம் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. இந்த நிலையில் காலை 9 மணிக்கு ஹைதராபாத்திலிருந்து 25 பெட்டிகளில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 270 கோவாக்சின் தடுப்பூசிகள் வந்தன.

விமான நிலையத்திலிருந்து தேனாம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவக் கிடங்கிற்கு கொண்டுசெல்லப்பட்டன.

அதுபோல் மாலை மேலும் மூன்று லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வரும் என அலுவலர்கள் தெரிவித்தனர். தமிழ்நாட்டிற்கு வந்த தடுப்பூசிகளைப் பல்வேறு பகுதிகளுக்குப் பிரித்து அனுப்பப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details