தமிழ்நாடு

tamil nadu

டாடா மோட்டார்ஸ் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை!

By

Published : Jul 8, 2020, 11:11 PM IST

டெல்லி: தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களுக்கு ஆறு மாத தவணைக்கு விடுப்பு அளிக்கும் திட்டத்தை டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

டாடா மோட்டார்ஸ் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை!
டாடா மோட்டார்ஸ் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை!

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள டாடா மோட்டார்ஸ், “டியாகோ, நெக்சான், ஆல்ட்ரோசன் ஆகிய மாடல் வாகனங்களுக்கான ஆறு மாத தவணை விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் மாத வட்டியை மட்டும் கட்ட வேண்டும்.

மேலும், இந்த சலுகை கருர் வைஸ்யா வங்கியுடன் நிர்ணயிக்கப்பட்ட வருவாய் ஈட்டும் சுயதொழில் செய்பவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஆட்டோ உற்பத்தியாளர் ஒருவர் கூறுகையில், இது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நல்ல சலுகை என்றார்.

கரோனா வைரஸ் ஊரடங்கினால் மும்பை ஆட்டோ மேஜர் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் அதன் உள்நாட்டு விற்பனை 61 விழுக்காடு சரிந்து, இந்தாண்டு 14,571 வாகனங்கள்தான் விற்பனையானது. ஆனால் கடந்த ஆண்டு இதே காலத்தில் 36,945 வாகனங்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...ரயில் வழியே 6.7 லட்சம் கார்களை தளவாடம் செய்துள்ள மாருது சுசுகி நிறுவனம்!

ABOUT THE AUTHOR

...view details