தமிழ்நாடு

tamil nadu

ரிலையன்ஸ் டிஜிட்டல் அதிரடி ஆஃபர்: அள்ளித்தரும் இணைய வர்த்தக நிறுவனங்கள்!

By

Published : Jul 25, 2021, 2:40 PM IST

இணைய வர்த்தக நிறுவனங்களான பிளிப்கார்ட், அமேசான் ஆகியன, ஆடி மாதத்தில் அதிரடி சலுகைகளை வழங்கும் நிகழ்வுகளை தொடங்கியுள்ளது. தற்போது அதற்கு போட்டியாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனமும் ஜூலை 26, 27 ஆகிய தினங்களில் சலுகைகளை அள்ளி கொடுத்திருக்கிறது.

ரிலையன்ஸ் டிஜிட்டல் அதிரடி ஆஃபர்
ரிலையன்ஸ் டிஜிட்டல் அதிரடி ஆஃபர்

மும்பை: தங்களது இணைய வர்த்தக தள பயனர்களுக்காக ஜூலை 26, 27 ஆகிய தினங்களில் அதிரடி சலுகைகளை ரிலையன்ஸ் டிஜிட்டல் அறிவித்துள்ளது.

இது அனைத்து ரிலையன்ஸ் டிஜிட்டல், மை ஜியோ ஸ்டோர்கள், ரிலையன்ஸ் டிஜிட்டல் என்ற இணையதளத்தில் இச்சலுகை நேரலையில் வழங்கப்படும். தொலைக்காட்சிகள், வீட்டு உபயோக பொருட்கள், மொபைல் போன்கள், லேப்டாப்கள் என பல்வேறு பிரிவுகளில் சிறப்புச் சலுகைகள் கிடைக்கின்றன.

ஸ்மார்ட்போன் பிரிவில், தள்ளுபடிகள் மற்றும் கவர்ச்சிகரமான கேஷ் பேக் ஆஃபர்களை வாடிக்கையாளர்கள் பெறலாம். லேப்டாப்களை ரூ.16,999 முதல், 32 அங்குல ஸ்மார்ட் டிவிகள் ரூ.12,990 முதல் சலுகை விலையில் கிடைக்கின்றன.

சாம்சங் கேலக்ஸி எப் 22: பழைய சிப்செட், புதிய அம்சங்கள், குறைந்த விலை!

மேலும், ரூ.1,999 மதிப்புள்ள இலவச பொருள்களுடன் டைரக்ட்-கூல் குளிர் சாதன பெட்டிகள் ரூ.11,990க்கும், டாப்-லோடு சலவை இயந்திரங்கள் ரூ.13,290க்கும் கிடைக்கின்றன.

வாடிக்கையாளர்கள் தங்கள் அருகிலுள்ள ஸ்டோர்களிலிருந்து இன்ஸ்டா டெலிவரி (3 மணி நேரத்திற்குள் டெலிவரி) மற்றும் ஸ்டோர் பிக்-அப் விருப்பங்களை தேர்வு செய்யலாம் எனவும் நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேனசோனிக் ஆண்ட்ராய்டு டிவி: ஜே.எக்ஸ், ஜே.எஸ் மாடல்கள் அறிமுகம்!

ABOUT THE AUTHOR

...view details