தமிழ்நாடு

tamil nadu

ஐஆர்சிடிசி நிறுவனத்தின் பங்குகளை விற்கும் மத்திய அரசு

By

Published : Dec 10, 2020, 2:59 PM IST

டெல்லி: ஐஆர்சிடிசி நிறுவனத்தின் 20 விழுக்காடு பங்குகளை விற்பனை செய்யவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Govt plans to sell up to 20% stake in IRCTC
Govt plans to sell up to 20% stake in IRCTC

இந்தியாவில் ரயில்வே துறை எவ்வித சிக்கலுமின்றி செயல்படுவதில் ஐஆர்சிடிசி நிறுவனத்தின் பங்கு முக்கியமானது. இந்நிலையில், ஐஆர்சிடிசி நிறுவனத்தின் 20 விழுக்காடு பங்குகளை விற்பனை செய்யவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதாவது ஐஆர்சிடிசி நிறுவனத்தின் 15 விழுக்காடு பங்குகள் (2.4 கோடி பங்குகள்) விற்கப்படவுள்ளன. பொதுமக்கள் அதிகளவில் ஐஆர்சிடிசி பங்குகளை வாங்க ஆர்வம் காட்டினால், கூடுதலாக ஐந்து விழுக்காடு பங்குகளையும்(80 லட்சம் பங்குகள்) விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

டிசம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் ஐ.ஆர்.சி.டி.சி பங்குகள் விற்பனைக்கு வரவுள்ளன. ஒரு பங்கின் விலை ரூ.1,367ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, ஐஆர்சிடிசி நிறுவனத்தின் சுமார் 12.6 விழுக்காடு பங்குகள் முதல் முறையாக கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பரில் விற்கப்பட்டது.

இதையும் படிங்க: இந்தியாவில் மட்டும் பேஸ்புக்கிற்கு இவ்வளவு வருமானமா?

ABOUT THE AUTHOR

...view details