தமிழ்நாடு

tamil nadu

நிதியுதவி, மருத்துவக் காப்பீடு கோரும் வர்த்தகப் பிரிவு செய்தியாளர்கள்

By

Published : Jun 5, 2020, 9:51 PM IST

டெல்லி: கரோனா தாக்கத்தால் ஏற்பட்டுள்ள நிதிச் சிக்கலைப் போக்கும் விதமாக நிதியுதவி, மருத்துவக் காப்பீடு கோரி மத்திய அரசுக்கு வர்த்தகப் பிரிவு செய்தியாளர் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

Money
Money

இந்திய வர்த்தகச் செய்தியாளர்கள் கூட்டமைப்பு அண்மையில் வெபினார் மூலம் கலந்துரையாடல் மேற்கொண்டது. அதில் நாடு முழுவதும் கரோனா தாக்கத்தால் ஏற்பட்டுள்ள நிதிச் சிக்கல் குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டது.

கலந்துரையாடல் கூட்டமைப்பின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், நாடு முழுவதும் தற்போது ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற தன்மை வங்கிகள் மட்டுமல்லாமல் வங்கிகளுக்கு முகவரியாக விளங்கும் வர்த்தகப் பிரிவு செய்தியாளர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறைந்த வருவாய் மட்டுமே ஈட்டும் இவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விதமாக மத்திய அரசு மாதம் ரூ. 5,000 நிதி உதவி வழங்க வேண்டும்.

மேலும், அடுத்த ஆறு மாத காலத்திற்கு பெருந்தொற்று பாதிப்பின் காரணமாக அசாதாரண சூழல் நிலவும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், களத்தில் பணிபுரியம் செய்தியாளர்களுக்கு காப்பீடு செய்து தர வேண்டும் என கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைத்துள்ளது.

இதையும் படிங்க:ஜியோவின் பங்குகளை ரூ.9 ஆயிரம் கோடிக்கு வாங்கிய முபாதலா நிறுவனம்!

ABOUT THE AUTHOR

...view details