தமிழ்நாடு

tamil nadu

நாமக்கல்லில் முட்டை விலை தொடர் சரிவு!

By

Published : Jun 22, 2020, 1:27 PM IST

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை விலை இன்று மீண்டும் 30 காசுகள் சரிந்து 3 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் தொடர்ந்து சரியும் முட்டை விலை
நாமக்கல்லில் தொடர்ந்து சரியும் முட்டை விலை

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 4 ரூபாயிலிருந்து 30 காசுகள் குறைத்து 3 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

கடந்த வாரம் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் வரை விற்கப்பட்டது. இந்நிலையில் முட்டை நுகர்வு குறைந்து விற்பனை சரிவடைந்து தேக்கம் ஏற்பட்டதால் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் கடந்த 13, 20ஆம் தேதிகளில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை தலா 30 காசுகள் விலை குறைத்து 4 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் 30 காசுகள் விலை குறைப்பு செய்யப்பட்டு 3 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 நாள்களில் 90 காசுகள் விலை குறைந்துள்ளது குறித்து கோழிப் பண்ணையாளர்கள் கூறும் போது, “பிற மண்டலங்களில் முட்டை விற்பனை குறைந்து விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பொது முடக்கம் காரணமாக முட்டை விற்பனை 30 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது.

முட்டை நுகர்வு குறைந்ததால் விலை குறைக்கப்பட்டுள்ளது. இவ்விலை வரும் நாள்களில் மேலும் சற்று குறைய வாய்ப்புள்ளது” என்றனர்.

இதையும் படிங்க: சென்னையிலிருந்து குன்னூர் திரும்பிய பெண்ணுக்குக் கரோனா!

ABOUT THE AUTHOR

...view details