தமிழ்நாடு

tamil nadu

முகமது ஜுபைருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

By

Published : Jul 3, 2022, 10:41 AM IST

ஆல்ட் நியூஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான முகமது ஜுபைரின் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில், அவரை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைத்திருக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் ஜூபைருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்- நீதிமன்ற அறிவிப்புக்கு முன்னே செய்தி வெளியிட்ட ஊடகங்கள்
ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் ஜூபைருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்- நீதிமன்ற அறிவிப்புக்கு முன்னே செய்தி வெளியிட்ட ஊடகங்கள்

டெல்லி:போலி செய்திகளை கண்டறிந்து, அவற்றை அம்பலப்படுத்தும் "ஆல்ட் நியூஸ்" நிறுவனத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர், ஜூன் 27ஆம் தேதி டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

2018ஆம் ஆண்டில் முகமது ஜுபைர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி பதிவு செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில், ஆதாரங்களை அழித்தல், குற்றவியல் சதி உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழங்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

முதலில் ஜுபைரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனிடையே பெங்களூருவில் உள்ள ஜுபைரின் வீட்டிற்கு, அவருடன் சென்ற டெல்லி போலீசார் ஆதாரங்களை தேடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் போதிய ஆதாரங்கள் கிடைக்காததால், ஜூபரை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் எடுத்த விசாரிக்க டெல்லி காவல் துறையினர் தரப்பில் நீதிமன்றத்தில் அனுமதிக்கோரப்பட்டது. அதே நேரத்தில் ஜுபைர் ஜாமீன் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையில் நேற்று (ஜூலை 2) நீதிபதி ஸ்னிக்தா, ஜுபைரின் ஜாமீன் மனுவை ரத்து செய்தார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்திருக்க உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை நீதிபதி இரவு 7 மணிக்கு அறிவித்தார். ஆனால், மதியம் 2.30 மணிக்கே பல்வேறு ஊடங்கங்களில் செய்திகள் வெளியாகிவிட்டன. இதுகுறித்து ஜூபைர் தரப்பு வழக்கறிஞர் தெரிவிக்கையில், டெல்லி போலீசார் நீதிபதிக்கு முன்னதாகவே ஊடகங்களுக்கு செய்தியை கசியவிட்டுள்ளனர். இது நம் நாட்டில் சட்டத்தின் நிலையை கேள்விக்குறியாக்கியுள்ளது என்றார்.

மேலும் இந்த வழக்கில், "முகமது ஜுபைர் கைது செய்யப்பட்ட பிறகு அவரை ஆதரிக்கும் விதமாக ட்விட்டர் பதிவுகள் வெளியாகிவருகின்றன. அதில் பல்வேறு கணக்குகள் பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்ததாக இருக்கிறது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆல்ட் நியூஸ் நிறுவன இணை நிறுவனர் முகமது ஜுபைர் கைது - சமூக ஆர்வலர்கள் கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details