தமிழ்நாடு

tamil nadu

மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் - விரையும் மத்திய குழு

By

Published : Aug 2, 2021, 7:22 PM IST

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு மத்திய குழு ஆய்வு செய்ய விரைந்துள்ளது.

Zika virus
Zika virus

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஜிகா வைரஸ் தொற்று முதல்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு ஆய்வு செய்ய மத்திய குழு விரைந்துள்ளது.

இந்த மூன்றுபேர் கொண்ட குழுவில் பிராந்திய சுகாதாரத்துறை இயக்குனர், ஐ.சி.எம்.ஆர் மருத்துவர், புது டெல்லியைச் தேர்ந்த லேடி ஹார்டினேஜ் மருத்துக்கல்லூரி மருத்துவர் ஆகியோர் அடக்கம்.

நாட்டில் கோவிட்-19 இரண்டாம் அலை ஓய்ந்த நிலையில், கேரளாவில் ஜிகா வைரஸ் பரவல் தென்படத் தொடங்கியது. இதையடுத்து கேரளா உஷார் நிலையில் வைக்கப்பட்டது.

தற்போது மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் கண்காணிப்பு பணிகள் முடுக்கவிடப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:ஆறாவது திருமணம் செய்த முன்னாள் அமைச்சர்- மனைவி பகீர் புகார்!

ABOUT THE AUTHOR

...view details