தமிழ்நாடு

tamil nadu

கணவருக்கு 10 நிமிடம் "கரண்ட் ஷாக்" கொடுத்துவிட்டு காதலனுக்கு போன் செய்த மனைவி

By

Published : Sep 17, 2022, 10:19 PM IST

உத்தரப் பிரதேச மாநிலத்தில் காதலனுக்காக கணவருக்கு கரண்ட் ஷாக் கொடுத்து கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.

கணவனுக்கு ’கரண்ட் ஷாக்’ கொடுத்துக் கொன்ற மனைவி...!
கணவனுக்கு ’கரண்ட் ஷாக்’ கொடுத்துக் கொன்ற மனைவி...!

மதுரா:உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஷேல்கேதா கிராமத்தில் கணவனை கரண்ட் ஷாக் கொடுத்து கொலை செய்ததாக பெண் ஒருவரும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது காதலரும் நேற்று(செப். 16) கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து மதுரா போலீசார் தரப்பில், “ஷேல்கேதா கிராமத்தைச் சேர்ந்த மன்வேந்திரா என்பவருக்கு கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி திருமணம் நடந்தது. அதன்பின் ஏப்.9ஆம் தேதி மன்வேந்திரா வீட்டில் மின்சாரம் தாக்கி மயங்கிவிட்டதாக, அவரது மனைவி உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் உறவினர்கள் மன்வேந்திராவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்பின் அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில் செப்.3 அன்று மன்வேந்திராவின் செல்போனை அவரது மருமகன் மனே என்பவர் பயன்படுத்தியுள்ளார். அப்போது ஓர் அதிர்ச்சிகரமான கால் ரெக்கார்டிங் சிக்கியுள்ளது.

அதில் மன்வேந்திராவின் மனைவி அடையாளம் தெரியாத போன் எண்ணை தொடர்பு கொண்டு ‘நீ கூறியபடியே 10 நிமிடம் மன்வேந்திராவிற்கு கரண்ட் ஷாக் கொடுத்துவிட்டேன். நிச்சயம் செத்துருவான..? என்று கேட்க, அதற்கு ‘கண்டிப்பாக செத்திருவான்’ என்று மறுப்புறம் ஓர் ஆண்குரல் கேட்டுள்ளது. உடனே அந்த ரெக்கார்டிங்கை மனே போலீசாரிடம் ஒப்படைத்து புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில், மன்வேந்திராவின் மனைவியும், அந்த செல்போன் எண்ணை வைத்திருந்த அதேந்திரா என்பரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் காதலித்து வந்ததாகவும், அதற்கு மன்வேந்திரா தடையாக இருந்ததால் திட்டமிட்டு கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். குறிப்பாக சம்பவத்தின்போது மன்வேந்திராவுக்கு அளவுக்கு அதிகமாக மதுகொடுத்துவிட்டு கரண்ட் ஷாக் கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: வேலை வாங்கித் தருவதாக கூறி கோடி கணக்கில் மோசடி செய்த இளம்பெண் கைது

ABOUT THE AUTHOR

...view details