தமிழ்நாடு

tamil nadu

பேஸ்புக் காதலன் மீது ஆசிட் வீசிய கேரள பெண்

By

Published : Nov 22, 2021, 7:06 PM IST

கேரள மாநிலத்தில் திருமணம் செய்துக்கொள்ள மறுத்த காதலன் மீது பெண் ஒருவர் ஆசிட்(Kerala Acid Attack) வீசிய சம்பவம் நடத்துள்ளது.

Woman attacks boyfriend with acid
Woman attacks boyfriend with acid

திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தை சேர்ந்த கார்த்திக்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் இடுக்கி மாவட்டம் அடிமல்லி பகுதியை சேர்ந்த ஷோபா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், இருவரும் திருமணப் பேச்சை எடுத்துள்ளனர். அப்போது திடுக்கிடும் உண்மை புலப்பட்டுள்ளது. அதாவது ஷோபா தனக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதை தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்டு, அதிர்ச்சியடைந்த கார்த்திக் ஷோபாவுடன் பேசுவதை தவிர்த்துள்ளார். வேறு பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட ஷோபா இறுதியாக ஒருமுறை நேரில் பேச வேண்டும் என்று கார்த்திக்கை அடிமல்லிக்கு அழைத்துள்ளார்.

இல்லையென்றால் உனது திருமணத்தையே நிறுத்த வருவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து கார்த்திக் தனது நண்பருடன் சம்பவயிடத்திற்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஷோபா தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை(Kerala Acid Attack) எடுத்து கார்த்திக் மீது வீசியுள்ளார். இதில் கார்த்திக் முகத்தில் படுகாயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஒரு கண் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க:கேரளாவில் இளைஞர் மீது பெண் ஆசிட் வீசிய விவகாரம் - சிசிடிவி காட்சிகள் வெளியாயின

ABOUT THE AUTHOR

...view details