தமிழ்நாடு

tamil nadu

புதுச்சேரியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட பெண் கைது

By

Published : Jun 7, 2021, 4:06 PM IST

புதுச்சேரி: கோயிலுக்கு சென்ற தம்பதியர் வீட்டில் நகை திருடிய பெண்ணை காவல் துறையினர் கைது செய்தனர்.

நகை திருடிய பெண் கைது
நகை திருடிய பெண் கைது

புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு தெற்கு தெருவை சேர்ந்தவர் சிவக்குமார்(எ)வீரப்பன். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

ஜனவரி 27ஆம் தேதி சொந்த ஊரில் நடந்த ஊத்துக்காட்டு மாரியம்மன் கோயில் குடமுழுக்ககை காண குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சாவியை கதவுக்கருகில் உள்ள பெட்டியில் வைத்துவிட்டு சென்றுள்ளார்.

25 பவுன் நகை திருடு

சொந்த ஊரில் இருந்து திரும்பிய அவர், வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவிலிருந்த 25 பவுன் நகை, ரூ. 80 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

இந்நிலையில் புதுச்சேரி முள்ளோடை அருகே பாகூர் சரக காவல் ஆய்வாளர் வரதராஜன் தலைமையிலான கிருமாம்பாக்கம் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

நகை திருடிய பெண் கைது

1.50 லட்சம் பறிமுதல்

அப்போது அவ்வழியாக வந்த ராஜி என்ற பெண்ணை சந்தேகத்தின்பேரில் விசாரித்தபோது, அவரிடம் மறைத்து வைத்திருந்த ரூ. 1.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அப்பெண்ணை கிருமாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, பனித்திட்டு கிராமத்தில் உள்ள சிவக்குமார் என்பவரின் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார்.

15 பவுன் நகை

மேற்கண்ட விசாரணையில் அவர் சிவக்குமார் வீட்டில் இருந்து 15 பவுன் தங்க நகைகளையும் ரூ. 80 ஆயிரம் பணத்தையும் திருடிச் சென்றதையும் ஒப்புக்கொண்டார்.

3.50 லட்சம் பறிமுதல்

ஆனால் அந்த நகைகளை அவர் விற்று பணமாக மாற்றியிருப்பதாகவும், மேலும் அந்தப் பணத்தில் ஒரு வாஷிங் மெஷின் வாங்கியிருப்பது தெரியவந்தது. பின்னர் அப்பெண்ணின் வீட்டில் சோதனை செய்தபோது வீட்டில் ரூ. 3.50 லட்சம் பணமும், ஒரு வாஷிங் மிஷினையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் விசாரணையில் வீராம்பட்டினத்தில் உள்ள ஒரு வீட்டிலும் இதே போன்று திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் நகையை பறிமுதல் செய்து அப்பெண்ணை கைதுசெய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details