தமிழ்நாடு

tamil nadu

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!

By

Published : May 30, 2022, 3:49 PM IST

புதுச்சேரியில் 1 முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 23அன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!
புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!

புதுச்சேரி: இன்று (மே 30) புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு 05.05.2022 அன்று தொடங்கிய பொதுத்தேர்வுகள், நாளை முடிவடைகிறது. இதற்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் 01.06.2022 முதல் தொடங்கி நடைபெறவுள்ளன.

முதலமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தலின்படி, எதிர்வரும் 2022 - 2023ஆம் கல்வியாண்டிற்கு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் 1 முதல் 10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு 23.06.2022 அன்று பள்ளிகள் திறக்கப்படும். 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 17.06.2022அன்று வெளியிடப்படும்.

இவ்வாறு 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது முதல், அரசுப்பள்ளிகளில் 11ஆம் வகுப்புக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. மேலும் 11ஆம் வகுப்பு தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details