தமிழ்நாடு

tamil nadu

பாலிவுட் நடிகரை சந்தித்த ஆளுநர்

By

Published : Nov 30, 2020, 11:31 AM IST

பாலிவுட் நடிகர், மாடல், ஃபிட்னெஸ் விளம்பரதாரரான மிலிந்த் சோமன் இன்று மேற்குவங்க ஆளுநர் ஜகதீப் தன்கரை சந்தித்துள்ளார்.

West Bengal Governor meets Milind Soman at Darjeeling Raj Bhawan
West Bengal Governor meets Milind Soman at Darjeeling Raj Bhawan

டார்லிஜிங்: மேற்குவங்க ஆளுநர் மாளிகையில் பாலிவுட் நடிகர், மாடல், ஃபிட்னெஸ் விளம்பரதாரரான மிலிந்த் சோமன் இன்று ஆளுநர் ஜகதீப் தன்கரை சந்தித்துள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஆளுநர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், சிறந்த உடற்பயிற்சி ஊக்குவிப்பாளர், சூப்பர் மாடல் மற்றும் நடிகர், குறிப்பாக இளைஞர்களுக்கு மிகவும் உந்துதலையும் உத்வேகத்தையும் அளித்துவரும் மிலிந்த் சோமனை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சோமன் இளைஞர்களுக்கான உடல் தகுதிகளுக்கு பெரிய முன்மாதிரியாக உள்ளார். அவர் 55 வயதிலும் ஆரோக்கியமாக இருப்பது குறித்து அறிவுறுத்துவதன் மூலம் பல்வேறு இளைஞர்கள் ஆரோக்கியமாக இருக்க தூண்டுகிறார் என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தனது 55ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கடற்கரையில் நிர்வாணமாக ஓடியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அமைச்சரை தாக்கிய கொத்தனார்...

ABOUT THE AUTHOR

...view details