தமிழ்நாடு

tamil nadu

'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு'- சொந்த செலவில் வாய்க்காலைத் தூர்வாரும் 4 கிராம விவசாயிகள்

By

Published : Nov 15, 2021, 4:18 PM IST

திருநள்ளாறு அருகே நல்லாத்தூரில் மழைநீர் வடியாததால் சுமார் 1000-ஏக்கர் பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. மேலும் வடிகால் வாய்க்காலில் மழைநீர் சூழ்ந்துள்ள நிலையில், ஆகாயத்தாமரைகளை விவசாயிகள் சொந்த செலவில் சுத்தம் செய்து வருகின்றனர்.

rain paddy damage
rain paddy damage

காரைக்கால் (புதுச்சேரி):தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை பெய்து வந்த நிலையில், புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாகப் பல்வேறு இடங்களில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் குறிப்பாக காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த நல்லாத்தூர், மத்தளங்குடி, பண்டாரவடை, குரும்பகரம், கெளக்குடி உள்ளிட்ட அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் பெய்து வந்த கனமழை காரணமாக சுமார் 1000-ஏக்கர் சம்பா பயிர்கள் முழுவதும் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாத அவலம்

இதில் மழை நீர் வடியாமல் இருந்ததற்குக் காரணம், வடிகால் நீர் செல்லும் சடையன் வாய்க்கால் சரிவர தூர்வாரப்படாமல் இருந்தது தான் காரணம் எனக்கூறி, சம்பா பயிர்களைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 4 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய சொந்த செலவில் சடையன் வடிகால் வாய்க்காலில் படிந்துள்ள ஆகாயத்தாமரைகளை சுத்தம் செய்தனர்.

சொந்த செலவில் வாய்க்காலைத் தூர்வாரும் 4 கிராம விவசாயிகள்

இதுகுறித்து இப்பகுதி மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தும் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படவில்லை எனத்தெரிகிறது.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - சொந்த செலவில் வாய்க்காலைத்தூர்வாரும் விவசாயிகள்

எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கவனத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து மழைக்காலம் முடிந்த பின், அனைத்து வடிகால் வாய்க்கால்களையும் முழுமையாகத் தூர்வாரி கொடுத்து, பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆன்லைன் தேர்வு வேண்டும் - மாணவர்கள் போர்க்கொடி!

ABOUT THE AUTHOR

...view details