தமிழ்நாடு

tamil nadu

இன்ஸ்டா ரீல்ஸ்களுக்கு உகந்த லொகேஷன் உஜ்ஜைன்? - இளம்பெண்கள்  மீது புகார்

By

Published : Oct 18, 2022, 12:36 PM IST

Updated : Oct 18, 2022, 12:42 PM IST

உஜ்ஜைனின் மஹாகல் கோயிலில் வைத்து இன்ஸ்டா ரீல்ஸ்களை பதிவிட்ட இரண்டு இளம்பெண்கள் மீது நடவடிக்கை கடும் எடுக்க வேண்டும் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டா ரீல்ஸ்களுக்கு உகந்த லொகேஷன் உஜ்ஜைன்? - இளம்பெண்கள் மீது கோயில் நிர்வாகம் புகார்
இன்ஸ்டா ரீல்ஸ்களுக்கு உகந்த லொகேஷன் உஜ்ஜைன்? - இளம்பெண்கள் மீது கோயில் நிர்வாகம் புகார்

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் புகழ் பெற்ற மஹாகள் கோயில் உள்ளது. இங்கு வந்த இரண்டு இளம்பெண்கள் தனித்தனியாக ரீல்ஸ்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். அதிலும் ஒரு பெண் பாலிவுட் பாடலுக்கு கோயில் வளாகத்தில் நடனமாடியும், மற்றொரு பெண் கோயிலின் கருவறையில் அமர்ந்து திரைப்பட வசனங்களையும் பேசுகிறார். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியது.

இந்த நிலையில் இதுகுறித்து கோயில் பூசாரி மகேஷ் கூறுகையில், “இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து கோயில் வளாகத்தில் நடைபெற்று வருகின்றன. இதனால் கோயிலின் மதிப்பிற்கு களங்கம் ஏற்படுகிறது. தற்போது இந்த பெண்களின் வீடியோக்கள் வைரலாகியது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இன்ஸ்டா ரீல்ஸ்களுக்கு உகந்த லொகேஷன் உஜ்ஜைன்? - இளம்பெண்கள் மீது புகார்

இவர்களை கைது செய்ய வேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது” என்றார். மேலும், ‘வைரலாகும் வீடியோவின் நம்பகத்தன்மையை உறுதி செய்த பிறகு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என உஜ்ஜைன் ஆட்சியர் ஆஷிஷ் சிங் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:’என் அம்மா என்னை அடிச்சுட்டாங்க...!’ காவல் நிலையத்தில் 3 வயது சிறுவன் புகார்...

Last Updated : Oct 18, 2022, 12:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details