தமிழ்நாடு

tamil nadu

விபத்தை தடுக்க 7ஆம் வகுப்பு மாணவர்கள் கண்டுபிடித்த சூப்பர் கண்ணாடி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 1, 2024, 12:40 PM IST

Special Glasses: நவ்சரி மாவட்டத்தில் உள்ள புஷ்பா பென் ஆர்.தேசாய் பள்ளியில் பயிலும், 7 ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் இணைந்து தூக்கமின்மையால் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்கும் வகையில், சிறப்பு கண்ணாடியைக் கண்டுபிடித்துள்ளனர்.

special glasses
சிறப்பு கண்ணாடி

நவ்சரி: குஜராத் மாநிலம், நவ்சரி மாவட்டத்தில் உள்ள புஷ்பா பென் ஆர்.தேசாய் பள்ளியில் பயிலும், 7 ஆம் வகுப்பு மாணவர்களான காவ்யா மற்றும் திஷா பட்டேல் ஆகிய இருவரும் இணைந்து விபத்துக்கள் மற்றும் அசாம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் சிறப்புக் கண்ணாடிகளை கண்டுபிடுத்து உள்ளனர்.

இந்த கண்ணாடிகளைக் கண்டுபிடிக்க சுமார் 3 மாதங்கள் ஆகி விட்டன எனவும், இதன் விலை ரூ.3000 ஆகும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து காவ்யா கூறுகையில், "நாங்கள் இருவரும் இணைந்து அறிவியல் ரீதியான கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து வருகிறோம். எங்கள் பள்ளியானது தேசிய நெடுஞ்சாலை எண்:48 அருகில் உள்ளது.

இந்த நெடுஞ்சாலைகளில் அதிக தூரம் பயணிக்கும் ஓட்டுநர்கள் தூங்குவதால் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்கும் வகையில், இந்த கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சிறப்புக் கண்ணாடியை ஓட்டுநர்கள் அணிந்து கொண்டே தூங்கினால், கண்ணாடியில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் மூலம் பஸரில் அலாரம் கேட்கும். அதன் மூலம் ஓட்டுநர்கள் விழித்துக் கொள்ளலாம்" எனக் கூறினார்.

இதுகுறித்து திஷா பட்டேல் கூறுகையில், "இந்த திட்டத்தில் சுற்று IC- 555 உடன் இணைக்கப்பட்டுள்ளது. 25 வோல்ட் கொண்ட IC நேர்மறை மற்றும் எதிர்மறை புள்ளிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. சென்சார் மற்றும் இரு சுவிட்ச்கள், 4 வோல்ட் திறன் கொண்ட பேட்டரி ஆகியவை கண்ணாடியுடன் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு DC மோட்டாருடன் சக்கரம் இணைத்து பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது.

சென்சார் ஆனது வாகன ஓட்டிகள் தூங்கினாலோ அல்லது 5 விநாடிகளுக்கு மேல் கண்களை மூடினால் அலாரம் ஒலிக்கும். வாகன ஓட்டிகள் அலாரத்தை நிறுத்தி விட்டு தூங்கினால், சென்சாரில் உள்ள பஸர் சத்தம் கேட்கும். இதன் மூலம் வாகன ஓட்டிகள் விழித்துக் கொள்வதுடன் பெரும் விபத்துக்கள் தவிர்க்கப்படும்" எனக் கூறினார்.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கேதகி தேசாய் கூறுகையில், "இந்த 7 ஆம் வகுப்பு மாணவர்கள் இருவரும் இணைந்து பெரும் விபத்துக்களைத் தடுக்கும் வகையில், இந்த கண்ணாடிகளை வடிவமைத்துள்ளனர். முன்னதாக, நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் L&T நிறுவனத்தின் பொறியாளர்களால் இவர்களின் கண்டுபிடிப்பு பாராட்டப்பட்டது. இந்த மாணவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன" என்று கூறினார்.

இதையும் படிங்க:புத்தாண்டை புது செயற்கைக்கோளுடன் தொடங்கும் இஸ்ரோ!

ABOUT THE AUTHOR

...view details