தமிழ்நாடு

tamil nadu

பிபிசி பஞ்சாபி ட்விட்டர் கணக்கு முடக்கம்: காரணம் மத்திய அரசா? பஞ்சாப் அரசா?

By

Published : Mar 28, 2023, 12:26 PM IST

பிபிசி பஞ்சாபியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை அந்நிறுவனம் முடக்கியது.

Etv Bharat
Etv Bharat

ஐதராபாத்: பிபிசி செய்தி நிறுவனத்தின் பிபிசி பஞ்சாபி அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டு உள்ளது. அரசின் சட்ட கோரிக்கையை அடுத்து பிபிசி பஞ்சாபி ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் அந்த ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த முடக்கத்திற்கான சட்ட கோரிக்கை ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு தரப்பில் வழங்கப்பட்டு உள்ளதாக அல்லது பஞ்சாப் அரசு தரப்பில் வழங்கப்பட்டதா என விவரம் வெளியாகவில்லை.

இருப்பினும் பிபிசி பஞ்சாபி ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காலிஸ்தான் பிரிவிணைவாத அமைப்பான வாரீஸ் டி பஞ்சாப் குழுவின் தலைவர் அம்ரித் பால் சிங்கை பஞ்சாப் போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில் இந்த திடீர் முடக்கம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு 2002 குஜராத் கலவரத்தை மையமாக வைத்து இந்தியா - மோடி மீதான கேள்விகள் என்ற தலைப்பில் பிபிசி நிறுவனம் ஆவணப் படத்தை வெளியிட்டது. இந்த ஆவணப் படத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. மத்திய ஒலிபரப்புத் துறை அமைச்சகம் இந்த ஆவணப் படத்திற்கு தடை விதித்தது.

மேலும் தடையை மீறி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இந்த அவணப் படத்தை திரையிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி நாட்டில் உள்ள பிபிசி செய்தி நிறுவன அலுவலகங்கள் மீது வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது.

இதற்கு முன் கடந்த மார்ச் 19 ஆம் தேதி சிரோமனி அகாலி தல் எம்.பி சிம்ரன்ஜித் சிங் மன் ட்விட்டர் கணக்கு மற்றும் கனேடிய எம்.பி. ஜக்மீத் சிங்கின் ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :EPFO Interest Hike: ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - இபிஎஃப் வட்டி விகிதம் உயர்வு - எவ்வளவு தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details