தமிழ்நாடு

tamil nadu

Coromandel Express: கோரமண்டல் ரயில் விபத்தால் ரத்து செய்யப்பட்ட ரயில்கள்.. முழு விவரம்

By

Published : Jun 3, 2023, 10:49 AM IST

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் இரண்டு பயணிகள் ரயில் ஒரு சரக்கு இரயில் உள்பட 3 ரயில்கள் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து ஒடிசாவில் இயக்கப்படும் ரயில்களுக்கு ரத்து, பகுதிநேர ரத்து மற்றும் மாற்றுப்பாதை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோரமண்டல் இரயில் விபத்தால் ரத்து மற்றும் திருப்பிவிடப்பட்ட இரயில்கள்
கோரமண்டல் இரயில் விபத்தால் ரத்து மற்றும் திருப்பிவிடப்பட்ட இரயில்கள்

பாலசோர்: ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில், கொல்கத்தாவின் ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், தடம் புரண்டிருந்த பெங்களூரு - ஹவுரா ரயிலுடனும், நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலுடனும் மோதி நேற்று (ஜூன் 2) இரவு விபத்துக்குள்ளானது. இதில் ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 238 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 900க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. அவசரகால உதவி பணிகளில் நுாற்றுக்கணக்கான அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க தமிழ்நாடு அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஒடிசா விரைகின்றனர். இந்த விபத்தை தொடர்ந்து பல ரயில்கள் ஒடிசாவில் ரத்து, மாற்றுப்பாதை மற்றும் பகுதி ரத்து செய்யப்படுவதாக கிழக்கு கடற்கரை ரயில்வே அறிவித்துள்ளது.

பகுதி ரத்து செய்யப்பட்ட ரயில்கள்:

1. 18021 - கரக்பூரிலிருந்து புறப்படும் கரக்பூர் - குர்தா எக்ஸ்பிரஸ் இன்று கராக்பூரிலிருந்து பைதராணி வரை ரத்து செய்யப்பட்டு பைதாணி முதல் குர்தா வரை இயக்கப்படும்.

2. 12891 - பாங்கிரிபோசியிலிருந்து புறப்படும் பாங்கிரிபோசி - புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் இன்று பாங்கிரிபோசியில் இருந்து ஜாஜ்பூர் கே ரோடு வரை ரத்து செய்யப்பட்டு, ஜாஜ்பூரிலிருந்து புவனேஸ்வர் வரை இயக்கப்படும்.

3. 18411 - பாலசோர் - புவனேஸ்வர் மெமு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டு ஜெனாபூர் முதல் புவனேஸ்வர் வரை இயக்கப்படும்.

4. 18022 - குர்தாவிலிருந்து புறப்படும் குர்தா - காரக்பூர் எக்ஸ்பிரஸ் பைதாணி வரை மட்டும் இயக்கப்படும்.

5. 12892 - புவனேஸ்வரில் இருந்து புறப்படும் புவனேஸ்வர் - பாங்கிரிபோசி எக்ஸ்பிரஸ் நேற்று ஜாஜ்பூர் கியோஞ்சர் வரை இயக்கப்பட்டு. ஜாஜ்பூர் கே ரோடு முதல் பாங்கிரிபோசி வரை ரத்து செய்யப்பட்டது.

6. 08412 - புவனேஸ்வரில் இருந்து புறப்படும் புவனேஸ்வர் - பாலசோர் மெமு நேற்று ஜெனாபூர் வரை இயக்கப்பட்டு ஜெனாபூர் முதல் பாலசோர் வரை ரத்து செய்யப்பட்டது.

ரத்து செய்யப்பட்ட ரயில்கள்(ஜூன் 2):

1. 12838 - பூரியில் இருந்து புறப்படும் பூரி - ஹவுரா எக்ஸ்பிரஸ்

2. 18410 - பூரியில் இருந்து புறப்படும் பூரி - ஷாலிமர் ஸ்ரீ ஜகன்னாத் எக்ஸ்பிரஸ்

3. 08012 - பூரியில் இருந்து புறப்படும் பூரி - பஞ்சாப்பூர் சிறப்பு ரயில்

திருப்பி விடப்பட்ட ரயில்கள்:

1. 03229 - நேற்று பூரியில் இருந்து புறப்படும் பூரி-பாட்னா சிறப்பு இரயில் ஜகாபுரா-ஜரோலி வழித்தடத்தில் இயக்கப்படும்.

2. 12840 - சென்னையில் இருந்து புறப்படும் சென்னை-ஹவுரா இரயில் ஜூன் 1இல் இருந்து ஜகாபுரா மற்றும் ஜரோலி வழித்தடத்தில் இயக்கப்படும்.

3. 18048 - வாஸ்கோடகாமாவில் இருந்து புறப்படும் வாஸ்கோடகாமா - ஹவுரா அமராவதி எக்ஸ்பிரஸ் 01.06.202இல் இருந்து ஜகாபுரா - ஜரோலி வழித்தடத்தில் இயக்கப்படும்.

4. 22850 - செகந்திராபாத்தில் இருந்து புறப்படும் செகந்திராபாத் - ஷாலிமார் எக்ஸ்பிரஸ் நேற்றில் இருந்து ஜகாபுரா மற்றும் ஜரோலி வழித்தடத்தில் இயக்கப்படும்.

5. 12801 - பூரியில் இருந்து இயக்கப்படும் பூரி - புது டெல்லி புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் நேற்றில் இருந்து ஜகாபுரா முதல் ஜரோலி வழித்தடத்தில் இயக்கப்படும்.

6. 18477 - பூரியில் இருந்து இயக்கப்படும் பூரி - ரிஷிகேஷ் கலிங்க உட்கல் எக்ஸ்பிரஸ் நேற்றில் இருந்து அங்குல் - சம்பல்பூர் நகரம் - ஜார்சுகுடா சாலை - Ib வழித்தடத்தில் இயக்கப்படும்.

7. 22804 - சம்பல்பூரில் இருந்து இயக்கப்படும் சம்பல்பூர் - ஷாலிமார் எக்ஸ்பிரஸ் நேற்றில் இருந்து சம்பல்பூர் நகரம் - ஜார்சுகுடா வழித்தடத்தில் இயக்கப்படும்.

8. 12509 - பெங்களூர் - கவுகாத்தி எக்ஸ்பிரஸ் 01.06.2023இல் இருந்து விஜயநகரம் - திட்டிலகர் - ஜார்சுகுடா - டாடா வழியாக இயக்கப்படும்.

9. 15929 தாம்பரம் - புதிய டின்சுகியா எக்ஸ்பிரஸ் 01.06.2023இல் இருந்து ரனிடால் - ஜரோலி பாதை வழியாக இயக்கப்படும்.

இதையும் படிங்க:Coromandel Express: உயிரிழப்பு எண்ணிக்கை 238 ஆக உயர்வு - மத்திய அரசு நிவாரணம் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details