தமிழ்நாடு

tamil nadu

சீனப் பயணத்துக்கு பின் உத்தரப் பிரதேச தொழிலதிபருக்கு கரோனா தொற்று உறுதி

By

Published : Dec 26, 2022, 7:01 AM IST

Updated : Dec 26, 2022, 8:11 AM IST

உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவைச் சேர்ந்த தொழிலதிபர் சீனாவில் பயணம் முடித்துவிட்டு 2 நாள்களுக்கு முன்பு நாடு திரும்பியுள்ளார்.

கரோனா தொற்று உறுதி
கரோனா தொற்று உறுதி

லக்னோ:உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள ஷாகஞ்ச் பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க தொழிலதிபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் டிசம்பர் 23ஆம் தேதி சீனாவிலிருந்து இந்தியா திரும்பியுள்ளார். அதன்பின் அவரது உடல்நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிதோசனையின் முடிவில் நேற்று (டிசம்பர் 25) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து அறிந்த ஆக்ரா சுகாதாரத் துறை அலுவலர்கள் தொழிலதிபரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

இப்போது அவர் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்தும் பணியில் சுகாதாரத் துறை அலுவலர்கள் ஈடுபட்டுவருகின்றனர். உலகம் முழுவதும் கரோனா பரவல் அதிகரித்துவருகிறது. குறிப்பாக சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் மற்றும் பிரேசில் BBV154 வகை கரோனா தொற்று பரவிவருகிறது. சீனாவில் மட்டும் நாளொன்றுக்கு கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துவருவதால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. இதனிடையே சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய நபருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மூக்கு வழியே செலுத்தப்படும் கரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல்

Last Updated :Dec 26, 2022, 8:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details