தமிழ்நாடு

tamil nadu

சுங்கச்சாவடிகளுக்கு நோ...டோல் கட்டணம் ஜிபிஎஸ் மூலம் வசூல் செய்யப்படும் - நிதின் கட்கரி

By

Published : Mar 18, 2021, 6:42 PM IST

டெல்லி: நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் ஓராண்டுக்குள் அகற்றப்பட்டு ஜிபிஎஸ் மூலம் டோல் கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்களவையில் கேள்வி நேரத்தில் போது பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி, அடுத்த ஓராண்டுக்குள் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டு ஜிபிஎஸ் மூலம் டோல் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஃபாஸ்டேக் எனப்படும் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், சுங்கக் கட்டணத்தை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்து காவல்துறைக்கு நிதின் கட்கரி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "93 விழுக்காடு வாகன ஓட்டிகள் ஃபாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்தி வருகின்றனர். ஃபாஸ்டேக் இல்லாதவர்கள் இரண்டு மடங்கு அதிகமாக டோல் கட்டணம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்ட போதிலும், 7 விழுக்காட்டினர் ஃபாஸ்டேக்கை இன்னும் வாங்கமால் உள்ளனர்" என்றார்.

ஜிபிஎஸ் மூலம் கட்டணம் செலுத்துவது எப்படி?

அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்டேக் பொருத்தப்பட்டிருக்கும். பேடிஎம் வாலட் போன்ற ஃபாஸ்டேக்கில் ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் ஒரு சுங்கச்சாவடியிலிருந்து மற்றோர் சுங்கச்சாவடிக்கு செல்லும்போது ஜிபிஎஸ் மூலம் கண்டறியப்பட்டு தானாகவே கட்டணம் வசூல் செய்யப்படும்.

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணம் செலுத்துவதற்காக சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சரக்கு வாகனங்களின் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதைத் தவிா்க்கவும் கட்டண வசூலில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவரவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஃபாஸ்டேக் எனப்படும் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டத்தை 2016ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது.

இருப்பினும், அதனை பலர் பயன்படுத்தாமல் இருந்தனர். இதற்கிடையே, கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி முதல், ஃபாஸ்டேக் இல்லாதவர்களுக்கு இரண்டு மடங்கு டோல் கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

ABOUT THE AUTHOR

...view details