தமிழ்நாடு

tamil nadu

சோபியான் துப்பாக்கிச்சூடு: 3 லக்‌ஷர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

By

Published : Dec 20, 2022, 9:30 AM IST

சோபியான் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

சோபியான் துப்பாக்கிச்சூடு: 3 லக்‌ஷர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
சோபியான் துப்பாக்கிச்சூடு: 3 லக்‌ஷர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர்:சோபியான் மாவட்டத்தில் உள்ள ஜைனாபோரா பகுதியின் முன்ஜ் மார்க்கில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் சம்பவயிடத்துக்கு விரைந்து இன்று (டிசம்பர் 20) தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகளை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தகவலை காவல்துறை ட்விட்டரில் தெரிவித்துள்ளது. இந்த பயங்கரவாதிகள் குறித்து சாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:வீடியோ: குளு குளு காஷ்மீரில் ஹவுஸ்ஃபுலான ஹோட்டல்கள்

ABOUT THE AUTHOR

...view details